வேகமாக பரவும் கொரோனா ! கேரளாவில் அடுத்தடுத்து மூடப்படும் பள்ளி, கல்லூரி,சுற்றுலாதலம்..! 

கேரளாவில் மட்டும் கொரோனா வைரஸால்  இதுவரை 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கருதி ஏழாம் வகுப்பு வரையிலான அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மார்ச் மாதம் முழுவதும் மூடப்படும் என்றும் ஏழாம் வகுப்பு வரையில் தேர்வுகளை ரத்து செய்து இப்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளார் 

மேலும் 8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி, திட்டமிட்டப்படி தேர்வுகள் நடைபெறும் என்றும், கண்காணிப்பில் இருக்கக்கூடிய மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது தவிர்த்து திருவிழாக்கள் மற்றும் வழிபடும் இடங்களிலும் மக்கள் கூடாதவாறு பார்த்துக்கொள்ளுதல் வேண்டும் என்றும்... 
 திருமணங்கள் கூட குறைந்த அளவிலான விருந்தினர்களை வரவழைத்து நடத்துவது சிறந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏழாம் தேதி அன்று இத்தாலியில் இருந்து வந்த குடும்பத்தில் 3 வயது சிறுவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் 1116 பேருக்கு கொரோனா அறிகுறி தென்படுகிறது. எனவே இதன் வீரியம் அதிகமாக இருப்பதால் மாநில பேரிடராக அறிவிக்க கேரள அரசு முடிவு செய்து உள்ளது.

மலையாள திரையுலக அமைப்பினர் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வரும் மார்ச் 31ம் தேதி வரை சினிமா தியேட்டர்கள் மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

சீனாவை போலவே, கேரளாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்கள்  மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் சீனாவில் எவ்வாறு பள்ளிகள்,அலுவலகங்கள், பொது  வழிபாட்டுத்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டதோ அதே போன்று கேரளாவிலும் மூடப்பட்டு வருகிறதை பார்க்கும் போது மக்கள் மத்தியில் ஒரு வித அச்சம் நிலவருகிறது. இருந்த போதிலும் கொரோனா  குறித்த விழுப்புணர்வு மக்கள்  மத்தியில் ஏற்படவே அரசும் இவ்வாறு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.