Asianet News TamilAsianet News Tamil

கொரோனா அச்சம் தவீர்.!! நெஞ்சம் நிமிர்.!! மதுரை பெண் போலீஸ் கதறும் வீடியோ..!!

மக்களே வெளியில் வராதீர்கள்,ஒரு வாரத்திற்கு தேவையான பொருள்களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் தயவு செய்து வெளியே வராதீர்கள் என, மதுரை பெண் காவலர் மீனாட்சி மூலம் பொதுமக்களிடம் கெஞ்சி கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

Corona fears. !! Nice nimir. !! Video of Madurai Woman Police .. !!
Author
Madurai, First Published Mar 31, 2020, 11:27 AM IST

T.Balamurukan

கொரோனா வைரஸ் பரவலைத்தடுக்க, "மக்களே வெளியில் வராதீர்கள்,ஒரு வாரத்திற்கு தேவையான பொருள்களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் தயவு செய்து வெளியே வராதீர்கள் என, மதுரை பெண் காவலர் மீனாட்சி மூலம் பொதுமக்களிடம் கெஞ்சி கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களைக் காப்பாற்ற இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மதுரையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவோர் தவிர, மாவட்டம் முழுவதும் தேவையின்றி சாலையில் சுற்றுபவர்கள் மீது சுமார் 1000க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைக்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிலரை போலீஸார் தடுத்து, எச்சரித்து அனுப்புகின்றனர். கொரோனாவின் தாக்கம் குறித்தும், பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருப்பது பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். ஆனாலும், போலீஸாரின் எச்சரிக்கையை மீறி,ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் வருவோர் மீது நடவடிக்கை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

Corona fears. !! Nice nimir. !! Video of Madurai Woman Police .. !!

கொரோனாவில் இருந்து பாதுகாக்க எல்லோரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கும்போது, இரவு, பகல் பராமல் பணியில் இருக்கும் போலீஸாருக்கு ஒத்துழைப்பு தராமல் அவசியமின்றி வெளியில் வருவது, தெரு முனைகளில் சிலர் கூட்டமாக சந்திப்பது போன்ற செயல் போலீஸாரை சோர்வடையச் செய்கிறது. போலீஸார் நடவடிக்கை எடுத்தால் அதை விமர்சனமும் செய்கிறார்கள்,வழக்கு போடுகிறார்கள் என, மனநொந்துபோகும் சூழலுக்கு தள்ளப்படுகிறோம் என, மதுரை காவல்துறையினர் புலம்புகின்றனர். இந்த நடவடிக்கைகள் எல்லாம் மக்களின் நன்மைக்காக மட்டுமே செய்து வருகிறோம் என்று புரிந்துகொள்ளுங்கள் என்று போலீசார் புலம்பி வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் மீனாட்சி என்பவர் தனது குமுறலை வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அதில்," உங்களுக்காக நாங்கள் வெளியில் வந்து இரவு, பகலாக வேலை செய்கிறோம். எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். பலர் ஒத்துழைப்பு செய்கிறீர்கள். இல்லை எனக் சொல்லவில்லை.

Corona fears. !! Nice nimir. !! Video of Madurai Woman Police .. !!

வீட்டுக்கு ஒருவர் வெளியில் வந்து தேவையான பொருட்கள் வாங்குங்கள். ஒரு வாரத்திற்கு வேண்டிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வெளியில் வந்தால் எல்லோரும் கஷ்டப்படுவோம். முதல்வர், பிரதமர், காவல்துறை உயரதிகாரிகள் தினமும் சிந்தித்து, பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கின்றனர். இதை புரிந்து கொள்ளுங்கள்.வெளியில் வராமல் இருப்பதே வீட்டுக்கும், நாட்டுக்கும், குடும்பத்திற்கும் நல்லது. தேவையின்றி வெளியில் வருவோர் மீது நடவடிக்கை எடுத்தால் எங்களை விமர்சனம் செய்கின்றனர். அதைத்தாண்டி பணிபுரிகிறோம். ஒத்துழைக்காத மக்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து வீட்டுக்குள் இருங்கள்," என, கண்ணீர் மல்க பதிவிட்டுள்ளார்.இது சமூகவலைத்தளங்களில் வைராலாகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios