Asianet News TamilAsianet News Tamil

கொரோனா எங்களை கொல்ல வர முடியாது...!! கதற விடும் ' கைலாசா நித்தியானந்தா'..!!

பரபரப்பு, பாலியல் வழக்கு, சர்ச்சைக்குரிய பேச்சு, அடிக்கடி ஆசிரமத்தை விட்டு ஓடுவதும் போலீஸ் துரத்தி பிடிப்பது இதுபோன்ற சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர் தான் நித்தியானந்தா.இவர் டைமிங் ஏற்றவாறு பதில்போடுவார்.,அந்த பதிலும் அதிர்வையோ,அதிர்ச்சியையோ தரும் வகையில் இருக்கும். அந்த வகையில், கொரோனா எங்களை தாக்காது எங்களை பரமசிவனும்,காலபைரவரும் பாதுகாக்கிறார்கள் என்று பதிவிட்டு இருக்கிறார். 

Corona can't come kill us ... !! 'Kailasa Nithyananda' .. !!
Author
Nithyananda Dhyanapeetam, First Published Mar 15, 2020, 11:26 PM IST

T.Balamurukan

பரபரப்பு, பாலியல் வழக்கு, சர்ச்சைக்குரிய பேச்சு, அடிக்கடி ஆசிரமத்தை விட்டு ஓடுவதும் போலீஸ் துரத்தி பிடிப்பது இதுபோன்ற சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர் தான் நித்தியானந்தா.இவர் டைமிங் ஏற்றவாறு பதில்போடுவார்.,அந்த பதிலும் அதிர்வையோ,அதிர்ச்சியையோ தரும் வகையில் இருக்கும். அந்த வகையில், கொரோனா எங்களை தாக்காது எங்களை பரமசிவனும்,காலபைரவரும் பாதுகாக்கிறார்கள் என்று பதிவிட்டு அடுத்த அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறார் நித்தி.

Corona can't come kill us ... !! 'Kailasa Nithyananda' .. !!Corona can't come kill us ... !! 'Kailasa Nithyananda' .. !!

நித்தியானந்தா மீது  கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.  கடத்தல் வழக்கில் குஜராத் போலீசார் நித்யானந்தாவை தேடியபோது அவர் பெண் சீடர்களுடன் வெளிநாடு தப்பி ஓடியனார். ஈக்வேடார் அருகே கைலாசா என்ற பெயரில் ஒரு தீவை அமைத்து தனி நாடாக உருவாக்கி அதற்கு கைலாசா என்று பெயரிட்டுள்ளார்.

கைலாசா நாட்டில் குடியேற 40 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.இதற்கிடையே கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.நித்யானந்தாவை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை போலீசார் நாடினர். இதையடுத்து "புளூ கார்னர்" நோட்டீஸ் பிறப்பித்து நித்யானந்தாவை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Corona can't come kill us ... !! 'Kailasa Nithyananda' .. !!

ஸ்ரீகைலாசா நாட்டின் பிரதமர் என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட நித்யானந்தா  தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில்  வெளியிட்ட வீடியோவில் 

கொரோனா வைரசால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. இது எதிர்காலத்திலும் எங்களுக்கு வராது. ஏனென்றால் பரமசிவன் எங்களைப் பாதுகாக்கிறார். காலபைரவர் எங்களுக்கு பாதுகாவலாக உள்ளார்,என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios