நாவூற செய்யும் கொத்தமல்லி விதை சட்னியின் முக்கிய பயன்களையும் செய்முறையையும் இங்கு காணலாம்.

கொத்தமல்லி விதைகளை சமையலில் பயன்படுத்துவார்கள். குழம்பு வகைகளில் இதற்கு தனி இடம் உண்டு. ஆனால் இதில் சட்னி செய்வது பலருக்கும் தெரியாத ஒன்று. பல மருத்துவ நன்மைகளை தன்னிடம் கொண்டிருக்கும் கொத்தமல்லி விதைகளில் எப்படி சட்னி செய்வது என இங்கு காணலாம்.

கொத்தமல்லி விதைகள் தைராய்டு நோய் பாதிப்புள்ளாவர்களுக்கு நல்லது. கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

சர்க்கரை நோய்க்கு நல்லது:

கொத்தமல்லி விதைகளில் சட்னி செய்து உண்பதால் உங்களுடைய இரத்த சர்க்கரை அளவு குறையும். இது இரத்தத்தில் அளவை கட்டுக்குள் வைக்க உதவுவதால் சர்க்கரை நோயாளிகள் நிச்சயம் காலை உணவுடன் எடுத்துக் கொள்ளலாம்.

கெட்ட கொலஸ்ட்ரால் குறைய!

கொத்தமல்லி விதைகள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். உடலுக்கு நன்மை செய்யும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனால் கெட்ட கொழுப்பினால் ஏற்படும் நோய்களை தவிர்க்கலாம்.

சிறுநீரக ஆரோக்கியம்

கொத்தமல்லி விதைகள உள்ள சில பண்புகள் சிறுநீரகத்தின் உள்ள நச்சு நீக்க விகிதத்தை மேம்படுத்தும். இதனால் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் குறைகின்றன. வீக்கம் குறையும்

கொத்தமல்லி விதைகளில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் இருக்கும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

கொத்தமல்லி விதை சட்னி செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்

1) சின்ன வெங்காயம் - 10 

2) கொத்தமல்லி விதைகள் - 2 டேபிள் ஸ்பூன் 

3) வரமிளகாய் - 4 முதல் 5 

4) உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 

5) கடலை எண்ணெய் - 1 டீஸ்பூன் 

6) தேங்காய் துருவியது - 2 டேபிள் ஸ்பூன் 

7) வெல்லம் - 1 டீஸ்பூன் 

8) புளி, உப்பு - தேவையான அளவு ( புளி அரை இஞ்ச் துண்டு சேர்க்கலாம்)

தாளிப்பு..!

1) கடலை எண்ணெய் - 1 டீஸ்பூன் 

2) கறிவேப்பிலை 

3) கடுகு - கால் டீஸ்பூன் 

4) உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்

கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி?

கடாயை அடுப்பில் வைத்து அரை டீஸ்பூன் கடலை எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடான பின்னர் கொத்தமல்லி விதைகளையும், உளுத்தம் பருப்பு, வர மிளகாய் ஆகியவற்றையும் பொன்னிறமாக வறுத்து ஆறவிட வேண்டும். அதே கடாயில் அரை டீஸ்பூன் மீண்டும் எண்ணெய் ஊற்றி அதில் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதையும் ஆறவிட வேண்டும் ஏற்கனவே வறுத்து வைத்த கொத்தமல்லி விதைகள், உளுத்தம் பருப்பு கலவையையும், சின்ன வெங்காயத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சிறிதளவு தண்ணீர், துருவிய தேங்காய் புளி, வெல்லம், தேவைக்கேற்ற உப்பு ஆகியவையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்திருக்கும் கலவையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் அல்லது வற்றல் ஆகியவை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். இதனுடன் சட்னியையும் சேர்த்து கிளறி விடுங்கள். ருசியான, ஆரோக்கியமான கொத்தமல்லி விதை சட்டி தயார்! பரிமாறி மகிழுங்கள்.