அடேங்கப்பா....செம்பு பாத்திர தண்ணீர் இவ்வளவு அற்புதம் வாய்ந்ததா..? படித்தால் மட்டும் போதாது... இதை எல்லாம் தெரிஞ்சிக்கோங்க..!

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து வைத்து குடித்து வந்தால் எந்த அளவுக்கு நன்மை உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்... பொதுவாகவே பல கோடி நன்மைகளை கொண்டதால்தான் அன்றைய காலகட்டத்திலேயே நம் முன்னோர்கள் செம்பு பாத்திரத்தை பயன்படுத்தி வந்தனர். அதிலும் குறிப்பாக செம்பு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து வைத்து குடித்து வந்தனர்.

இதன் மூலம் செம்பில் உள்ள சத்து நம் உடல் எலும்பை மிகவும் வலிமையாக்கும்.மேலும் நம் உடலில் உள்ள தேவையில்லாத பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது. நோய் எதிர்ப்பு தன்மையையும் கொடுக்கிறது. நம் உடலில் தங்கியிருக்கக் கூடிய கழிவுகளை அகற்றுகிறது. மேலும் பல முக்கிய பண்புகளையும் கொண்டிருக்கிறது.

இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் வீட்டில் செம்பு பாத்திரம் இல்லாத தருணத்தில், ஏதாவது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து வைத்து இருந்தாலும் ஒரு சிறிய செம்பு துண்டை அந்த தண்ணீரில் போட்டு வைத்திருந்தாலே போதும். அந்த தண்ணீர் முழுக்க தூய்மையாகி விடும். இத்தகைய சிறப்பு வாய்ந்தது செம்பு. மேலும் செம்பு பாத்திரத்தை தூய்மைப்படுத்தும் போது, அடுப்புச் சாம்பல் அல்லது புளி\யைக் கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும்.  அடுப்புச் சாம்பல் கிடைக்கவில்லை என்றாலும் புளியை மட்டும் வைத்து சுத்தம் செய்யலாம். காரணம் புளியில் உள்ள அமிலத்தன்மை செம்பு பாத்திரத்தை மிகவும் பளபளப்பாக மாற்றி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.