MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Energy Drinks: உங்க குழந்தை எனர்ஜி ட்ரிங்க் குடிக்குதா? நிபுணர்கள் சொல்ற இந்த எச்சரிக்கையை தெரிஞ்சுக்கோங்க!

Energy Drinks: உங்க குழந்தை எனர்ஜி ட்ரிங்க் குடிக்குதா? நிபுணர்கள் சொல்ற இந்த எச்சரிக்கையை தெரிஞ்சுக்கோங்க!

Energy Drinks For Kids: குழந்தைகள் மத்தியில் எனர்ஜி ட்ரிங்க்ஸ் பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Jul 05 2026, 04:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
குழந்தைகளுக்கான பானங்கள்
Image Credit : AI

குழந்தைகளுக்கான பானங்கள்

சமீப ஆண்டுகளில் குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினரிடையே எனர்ஜி டிரிங்க்ஸ் அருந்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. கவர்ச்சிகரமான விளம்பரங்கள், வண்ணமயமான பாட்டில்கள் மற்றும் "உடனடி ஆற்றல்" என்ற வாக்குறுதிகள் பலரையும் ஈர்க்கின்றன. ஆனால், இந்த பானங்கள் சாதாரண குளிர்பானங்கள் அல்ல என்றும், குழந்தைகளின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

இதன் பின்னணியில், பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் எனர்ஜி டிரிங்க்ஸ் விற்பனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் சில மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன. எனர்ஜி டிரிங்க்ஸ்களில் அதிக அளவு காஃபின், சர்க்கரை, டாரின், குரானா மற்றும் சில வைட்டமின்கள் சேர்க்கப்படுகின்றன. 

இந்த கலவைகள் தற்காலிகமாக விழிப்புணர்வை அதிகரிக்கலாம். ஆனால், வளர்ந்து வரும் குழந்தைகளின் உடலில் இதன் தாக்கம் வேறுபடும். குறிப்பாக அதிகப்படியான காஃபின், இதயத் துடிப்பு அதிகரிப்பு, பதட்டம், அமைதியின்மை மற்றும் ரத்த அழுத்த உயர்வு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

முடிக்கு டை அடிப்பதால் என்னென்ன ஆபத்து வரும்? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
எனர்ஜி ட்ரிங்க் ஆபத்து
Image Credit : Getty

எனர்ஜி ட்ரிங்க் ஆபத்து

இந்த பானங்களை அடிக்கடி அருந்தும் குழந்தைகளுக்கு தூக்கக் குறைபாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. போதுமான தூக்கம் இல்லாததால், கவனச்சிதறல், நினைவாற்றல் குறைவு, ஆர்வமின்மை மற்றும் மனநிலை மாற்றங்கள் படிப்பில். மேலும், அதிக சர்க்கரை உள்ளதால் உடல் எடை அதிகரிப்பு, பல் சேதம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களுக்கும் இது வழிவகுக்கும்.

இதனால்தான் பல எனர்ஜி ட்ரிங்க் தயாரிப்புகளின் லேபிள்களில், "குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிந்துரைக்கப்படவில்லை" என்ற எச்சரிக்கை இடம்பெறுகிறது. மேலும், இந்த வகை பானங்களின் விளம்பரங்கள் மற்றும் பெயரிடல் குறித்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமும் (FSSAI) அண்மையில் கவனம் செலுத்தியுள்ளது.

குழந்தைகளுக்கு எனர்ஜி டிரிங்க்ஸ் கொடுப்பதற்குப் பதிலாக, பால், இளநீர், மோர், அளவான இயற்கை பழச்சாறு அல்லது வீட்டிலேயே தயாரிக்கும் பழ ஸ்மூத்திகள் போன்ற ஆரோக்கியமான பானங்களை வழங்குவது நல்லது. குழந்தை சோர்வாக இருப்பதாகத் தோன்றினால், எனர்ஜி ட்ரிங்கைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக அதன் காரணத்தை மருத்துவரிடம் ஆலோசித்து கண்டறிவதே பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான அணுகுமுறை.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குழந்தைகள் நல பராமரிப்பு குறிப்புகள்
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Thick Eyebrows: அடர்த்தியான கருமையான புருவம் வேண்டுமா? இதோ 6 டிப்ஸ்
Recommended image2
Monkey Menace: குரங்கு தொல்லை ஓவர்! இந்த ஒரு விஷயத்தை செஞ்சா... உங்க வீட்டு பக்கமே வரவே வராது!
Recommended image3
Food Processor vs Mixer Grinder: சமையலறையில் நேரத்தை மிச்சப்படுத்துவது எது?
Related Stories
Recommended image1
Banana Science: வாழைப்பழம் ஏன் வளைந்திருக்கு தெரியுமா? பலரும் அறியாத ஆச்சரிய அறிவியல் ரகசியம்!
Recommended image2
Washing Machine Tips: வாஷிங் மெஷின் கரண்ட்டை உறிஞ்சுகிறதா? EB பில்லை பாதியாக குறைக்க 5 டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved