டெல்லியில் அழிந்து போன "காங்கிரஸ்"..! யோசிக்க தொடங்கிய திமுக கூட்டணி...! பகீர்  கிளப்பும் அரசியல் பின்னணி...! 

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரசுக்கு 10 தொகுதிகளை கொடுத்த திமுக தற்போது டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகளை பார்த்து சற்று யோசிக்க தொடங்கி உள்ளது. காரணம்... காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பதே...

நிருபரின் கழுத்தில் "பாம்பு"..! நிகழ்ச்சியின் போது நடந்த விபரீத காட்சியை பாருங்க..!

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவியது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 21 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடக்க முதலே பல்வேறு இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்று வந்தது. தற்போது நிலவரப்படி ஆம் ஆத்மி 63 தொகுதிகளிலும், பாஜக 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி 53.6 சதவீத வாக்குகளும், பாஜக 40.02 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் 4.45 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளது.

ஷீலா தீட்சித் (Sheila Dikshit) 

1998 ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லி முதலமைச்சராக பதவியில் இருந்தவர் ஷீலா தீட்சித். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். டிசம்பர் 2013 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இவர் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தன் சொந்தத் தொகுதியில் தோல்வியுற்றார். தொடர்ந்து பெரும்பான்மை இடங்களைப் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பிறகு ஷீலா தீக்சித்,மார்ச் 2014 முதல் ஆகஸ்ட் 2014 வரை கேரள மாநில ஆளுநராகப் பதவி வகித்தார். தற்போது இவர் டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உள்ளார்.

ஷீலா தீக்சித் பிறகு டெல்லி சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் எழுச்சி பெறவே இல்லை. இந்த நிலையில் தற்போது டெல்லி சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 63 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும்  வெற்றி வாய்ப்பைம் பெற்று  உள்ளது. ஆனால்  காங்கிரஸ் ஒரு தொகுதியயில் வெற்றி பெறாத காரணத்தினால், டெல்லியில்  காங்கிரஸ் முற்றிலும் அழிந்தே விட்டதோ என்ற  மனப்பான்மை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் தான் காங்கிரசுக்கு அதிக முக்கியதுவம் கொடுத்து திமுக வைத்துக்கொண்ட கூட்டணியில் 10 இடங்களை கொடுத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெல்லி ரிசல்ட் வைத்து பார்க்கும் போது காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து திமுக சற்று சிந்திக்க தொடங்கி உள்ளது என அரசியல் விமர்சனம் கிளம்பி உள்ளது.