வேலைக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் பிடிக்கக்கூடாது..! முதலமைச்சர் அதிரடி...

தடை உத்தரவு நாட்களில் வேலைக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுகிறது. நாளை காலை 6 மணி முதல் வரும் 31-ஆம் தேதி வரை அனைத்து எல்லைகளும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது 

ஆனால் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கும் என்பதை உறுதி செய்து உள்ளது தமிழக அரசு. அதன்படி பால், காய்கறி, கடைகள், இறைச்சி கடைகள் இயங்கும் என்றும் அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ் சேவை, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் என்றும், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும் என்றும் அமைச்சர் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மற்றபடி அனைத்து வணிக வளாகங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று அத்தியாவசிய கட்டிட பணிகளை தவிர்த்து அனைத்து விதமான கட்டுமான பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வேறு எங்கும் உணவு கிடைக்கவில்லை என்றாலும் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடுகள் தவிர விடுதிகளில் தங்கி இருப்பதற்கு உணவுகள் கிடைக்கும் விதத்தில் உணவகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் நடமாட்டம் இருந்தாலும் காரணத்தை தெரிவிக்க வேண்டி இருக்கும். காவல் துறை, சுகாதாரத் துறை, உள்ளாட்சி துறை, தீயணைப்புத் துறை ஆகியவை தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது