changes in weather said world report

வரலாறு காணாத தட்பவெட்பம் ..! மிரட்டும் உலக வானிலை ஆய்வு மையம்....

உலக அளவில் தட்பவெட்ப நிலை பெரிதும் மாற்றம் கண்டு வருகிறது. தொடர்ந்து புவி வெப்பம் அடைந்து வருவதால், அளவிற்கு அதிகமாக பனி மலைகள் உருக தொடங்கியுள்ளன. இதன் காரணமாக வரலாறு காணாத அளவிற்கு கடல் மட்டம் உயர்ந்து வருகிறது.

உலகில் ஆர்ட்டிக் மற்றும் வட, தென் துருவப் பகுதிகளில் கடல் பனிப்பாறை 40 லட்சம் சதுர கி.மீ பரப்பளவுக்கு உருகி கரைந்துள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

உலக வெப்பநிலை பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் கணிக்க கூட முடியாத அளவிற்கு மாபெரும் மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

உலக அளவில் வானிலை தட்பவெட்பநிலை மேலும் 5௦ சதவீதம் மாற உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது ஆஸ்திரேலியே வானிலை ஆய்வு மையம் 

எல்நினோ

எல் நினோ எனப்படும் காலநிலை மாற்றத்தால், மழை காலத்தில் அளவுக்கு அதிகமான மழையும் கோடை காலத்தில் அதிகமான வெப்பமும் நிலவும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக அளவுகடந்த வறட்சி, மழை வெள்ளம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது உலக வானிலை ஆய்வு மையம். 

எனவே இந்த ஆண்டு உலக அளவில் வானிலையில் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம் .