கொரோனா எதிரொலி.! மத்திய அரசு அறிவித்த அடுத்த சூப்பர் சலுகை! பெருமூச்சு விட்ட மக்கள்..! 

கொரோனா எதிரொலியால் நாடே ஊரடங்கில் உள்ளதால் மக்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. வீட்டை விட்டு வெளியில் வர முடியாது, அப்படியே வந்தாலும் அத்தியாவசிய தேவைகளுக்காக வர முடியும்...

அவசரமாக பயணம் செய்ய வேண்டும் என்றால், உரிய ஆதாரத்துடன் தான் பயணம் செய்ய முடியும்... இந்த ஒரு நிலையில் மக்கள் எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்பதற்காக ..மத்திய மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருவது மட்டுமல்லாமல் பல சலுகைகளையும் அறிவித்து வருகிறது

அதன் படி, அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்கு சம்பளம் நிறுத்த கூடாது என தனியார் நிறுவனங்களை  மத்திய அரசு கேட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ள வசதி  ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சில தொலைத்தொடர்பு  நிறுவனங்கள் சலுகை அறிவித்து உள்ளன. கேஸ் சிலிண்டர்  இலவசமாக பெற வாய்ப்பு என சொல்லிக்கொண்டே போகலாம். இந்த ஒரு நிலையில் காலாவதியான வாகன மற்றும் ஓட்டுநர் ஆவணங்கள் ஜூன் 30 வரை ஏற்புக்குரியதாகவே கருதப்படும் என மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

அதன்படி வாகன தரக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமங்கள், வாகனபதிவுச் சான்றிதழ்கள் உள்ளிட்டவை பிப்ரவரி 1க்குப் பிறகு காலாவதியாகியிருந்தால்.. அது தொடர்பாக போலீசாரும் போக்குவரத்துத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் அந்த ஆவணங்களை ஜூன் 30 வரை ஏற்புக்குரியதாகவே கருத வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு   விட்டுள்ளனர்.

வாகன போக்குவரத்து தொடர்பான மேலும் சில அறிவிப்புகள் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது. அவ்வாறு மக்களுக்கு நன்மை பயக்கும் சலுகை அறிவித்தால் கட்டாயம் இது போன்ற இக்கட்டான சூழலை மிக எளிதாக  கடந்து செல்ல முடியும்