எந்த காரணமும் இல்லாமல் உங்களது வாய் கசப்பதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து இந்த பதிவை தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக காய்ச்சல் இருக்கும்போது மற்றும் காய்ச்சலில் இருந்து மீண்ட பிறகும் சில நாட்கள் வரை வாயில் கசப்பு உணர்வு ஏற்படுவது இயல்பானது தான். இது தவிர சில நேரங்களில் பல் துலக்கிய பிறகும் வாய் கசக்கும். இதற்கான காரணத்தை தெரியாமல் உடனே தண்ணீர் குடிப்போம், சாக்லேட் சாப்பிடுவோம், அல்லது துர்நாற்றம் என நினைத்து கூட உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்போம். ஆனாலும் இதையெல்லாம் செய்த பிறகும் வாய் கசக்க தான் செய்யும். இப்படி வாய் திடீரென கசப்பாக இருப்பது போல் உணர்வது ஏன்? இது ஒரு தீவிரமான பிரச்சனையின் அறிகுறியா? அல்லது இயல்பானதா? இந்த கசப்பை தணிக்க என்ன செய்ய வேண்டும்? இந்த கேள்விக்கான பதிலை இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வாயில் கசப்பு உணர்வு ஏற்படுவதற்கான காரணங்கள் :

திடீரென வாயில் கசப்பு உணர்வு ஏற்படுவதற்கான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை :

- நீச்சத்து இழப்பு - தொற்று - சில மருந்துகளின் விளைவுகள் - புகைபிடித்தல் - ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் - அமில ரிப்ளக்ஸ் - வயது மூப்பு காரணம் - சைனஸ் தொற்று மற்றும் பருவ கால ஒவ்வாமைகள் - கொழுப்பு கல்லீரல், தொற்று நோய், காய்ச்சல் உள்ளிட்ட இன்னும் சில காரணங்களாலும் வாய் கசக்க தான் செய்யும். அறிகுறிகள் :

- வறண்ட வாய் அல்லது உமிழ்நீர் உற்பத்தி குறைதல் - குமட்டல் அல்லது வாந்தி உணர்வு ஏற்படுதல் - சோர்வாக அல்லது பலவீனமாக உணர்தல் - வாய் அல்லது தொண்டையில் எரியும் உணர்வு ஏற்படுதல் - அதிகப்படியான வாய் துர்நாற்றம் - பேசுதல் மற்றும் உணவு விழுங்குவதில் சிரமம்

வாய் கசப்பை போக்க உதவும் சில வழிகள் :

1. நிறைய தண்ணீர் குடியுங்கள்

வாயில் கசப்பு ஏற்படுவதை தடுக்க நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். உங்களுக்கு வெறும் தண்ணீர் மட்டும் குடிக்க பிடிக்கவில்லை என்றால் தேங்காய் நீர் அல்லது மூலிகை தேநீரை கூட குடிக்கலாம்.

2. பேக்கிங் சோடா :

இதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து அதை கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும். பேக்கிங் சோடாவில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் வாய் துர்நாற்றம் மற்றும் அமிலத்தன்மையை போக்கவும், வாய் கசப்பை நீக்கவும் உதவுகிறது.

3. கர்ப்பகால வாய் கசப்பு

கர்ப்ப காலத்தில் வாய் கசப்பு ஏற்படுவது பொதுவானது. ஹார்மோன் மாற்றம் காரணமாக வாய் கசக்க ஆரம்பிக்கும். லெமன் ஜூஸ் குடிக்கலாம். இது தவிர கொய்யா பழம், மாங்காய் சாப்பிடலாம்.

4. வாய் சுகாதாரம்

வாய் சுகாதாரம் மோசமாக இருந்தாலும் காலை எழுந்த பிறகு வாய் கசப்பை உணர்வீர்கள். இதற்கு காலை மற்றும் இரவு என இரண்டு வேளையும் பல் துலக்க வேண்டும். முக்கியமாக என் ஆற்றில் படிந்து இருக்கும் கிருமிகளை அகற்றவும்.

எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும்?

- வாயில் கசப்பு உணர்வு சில நாட்கள் அல்லது வாரங்கள் வரை நீடித்தால்

- திடீரென அதுவும் அதிகப்படியான எடை இழப்பு அல்லது பலவீனம்

- அமில ரிஃப்ளக்ஸ், சுவாசத் தொற்று அல்லது வேறு ஏதேனும் மருத்துவ நிலை - கசப்பு உணர்வு, வாந்தி, குமட்டல் அல்லது வயிற்று வலி - கசப்பு உணர்வு காரணமாக சாப்பிடுதல் மற்றும் குடிப்பதில் சிரமம் ஏற்பட்டால்

வாய் சுகாதாரத்தை ஆரோக்கியமாக பேணுவதன் மூலம் வாய் கசப்பை தவிர்க்கலாம்.