ஈவினிங் ஸ்னாக்ஸ்.. சுவையான காலிஃப்ளவர் பக்கோடா.. ரெசிபி இதோ!
Cauliflower Pakoda : மாலை வேளையில் டீ காபியுடன் காலிஃப்ளவரில் இப்படி பக்கோடா செய்து சாப்பிடுங்கள். சுவையாக இருக்கும் ரெசிபி உள்ளே..
மாலை நேரத்தில் டீ காபி குடிக்கும் போது ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? அதுவும் வீட்டிலேயே சிம்பிளா செய்து சாப்பிட கூடி வகையில் இருக்க வேண்டுமா? அப்படியானால் உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் இருக்கா? அதில் பகோடா செய்து சாப்பிடுங்கள். காலிஃப்ளவர் பகோடா அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்நாக்ஸ் ஆகும். குறிப்பாக குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். காலிஃப்ளவர் பகோடா செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது, சுலபமாக செய்துவிடலாம். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் காலிஃப்ளவர் பகோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதையும் படிங்க: 10 நிமிடத்தில் டீக்கு சுடசுட முட்டை போண்டா.. இப்படி செஞ்சி பாருங்க!!
காலிஃப்ளவர் பகோடா செய்ய தேவையான பொருட்கள் :
காலிஃப்ளவர் - 1/2 கிலோ
கடலை மாவு - 1 1/2 ஸ்பூன்
மைதா - 1 1/2 ஸ்பூன்
சோள மாவு - 1 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - சிறிதளவு
இதையும் படிங்க: ஈவினிங் ஸ்நாக்ஸாக முட்டைக்கோஸில் இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. சூப்பரா இருக்கும்!
செய்முறை :
காலிஃப்ளவர் பகோடா செய்ய முதலில், அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் நிரப்பி அதில் காலிஃப்ளவர், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி காலிஃப்ளவரை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, மைதா, சோள மாவு, கரம் மசாலாத்தூள், சிவப்பு மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, எலும்பிச்சை சாறு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனுடன் வேகவைத்து எடுத்த காலிஃப்ளவரையும் சேர்த்து கொள்ளுங்கள். காலிஃப்ளவரில் மசாலா நன்கு இறங்கியவுடன் சிறிது நேரம் அப்படியே வைத்து விடுங்கள். இப்போது அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் காலிஃப்ளவரை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான காலிஃப்ளவர் பக்கோடா ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D