ஈவினிங் ஸ்நாக்ஸாக முட்டைக்கோஸில் இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. சூப்பரா இருக்கும்!
Muttaikose Vadai Recipe : இந்த கட்டுரையில் முட்டைகோஸில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஈவினிங் டைம்ல டீ காபி குடிக்கும் போது வடை சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? கூடவே பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் சாப்பிடும் வகையில் ஏதாவது ஸ்னாக்ஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான். ஆம், இந்த பதிவில் உங்களுக்காக, நீங்கள் எப்போது சாப்பிடும் வடை அல்லாமல், சற்று வித்தியாசமாக முட்டைக்கோஸ் வைத்து வடை செய்வது எப்படி என்று கொண்டு வந்துள்ளோம்.
இந்த முட்டைகோஸ் வடை சாப்பிடுவதற்கு சுவையாகவும் செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்கும் முக்கியமாக இது ஆரோக்கியமானதும் கூட. ஒருமுறை இந்த முட்டைகோஸ் வடையை உங்கள் வீட்டில் உள்ளவர்கள் இதை செய்து கொடுங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் முட்டைகோஸ் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதையும் படிங்க: ஈவினிங் டைம்ல டீக்கு மீல்மேக்கர் வச்சி இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்டா இருக்கும்!
முட்டைக்கோஸ் வடை செய்ய தேவையான பொருட்கள் :
உளுந்தம் பருப்பு - 200 கிராம்
கடலைப்பருப்பு - 100 கிராம்
முட்டைகோஸ் - 1/2
மிளகு - 1 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
இஞ்சி - 1/2
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: அட..! சிக்கனில் வடை கூட செய்யலாமா..? ரெசிபி இதோ..!
செய்முறை :
முட்டைக்கோஸ் வடை செய்ய முதலில், எடுத்து வைத்தால் உளுந்தம் பருப்பு கடலை பருப்பை நன்றாக தண்ணீரில் கழுவி, பிறகு அதை சுமார் 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பின் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் சோம்பு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அரட்டை இந்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் அதனுடன் நறுக்கிய முட்டைகோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, துருவி இஞ்சி, பெருங்காயத்தூள், மிளகு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடாகவும். எண்ணெய் நன்றாக சூடானதும், அதில் தயாரித்து வைத்த மாவை சிறிதளவு எடுத்து கையில் தட்டி மாவின் நடுவில் துளையிட்டு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். கையில் மாவு வைப்பதற்கு முன் உங்கள் கைகளில் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். இதே போல எல்லா மாவையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும் அவ்வளவுதான் சுவையான முட்டைகோஸ் வடை ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுக்கு பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D