Asianet News TamilAsianet News Tamil

முந்திரி பருப்பு! விலை அதிகம் தான்! ஆனால் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்!

பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை முந்திரியை விரும்பாதவர்கள் இருக்க முடியாது - காரணம் சுவை.  அது சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. முந்திரியை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். அளவுடன் சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டு.

Cashew Nut! The price is too much! But know the benefits!
Author
Chennai, First Published Oct 7, 2018, 2:18 PM IST

பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை முந்திரியை விரும்பாதவர்கள் இருக்க முடியாது - காரணம் சுவை.  அது சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. முந்திரியை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். அளவுடன் சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டு.

இதய ஆரோக்கியம்

மற்ற பருப்புகளை விட முந்திரியில் கொழுப்பு குறைவு. இதில் இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒலிசிக் அமிலம் உள்ளது. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் பண்புகள் மாரடைப்பிலிருந்து பாதுகாக்கும்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தத்தை குறைக்கும் மக்னீஷிசியம் முந்திரியில் அதிகம் உள்ளது. தொடர்ந்து முந்திரியை உணவில் சேர்த்தால் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும்.

எலும்புகளின் ஆரோக்கியம்

கால்ஷியம் போன்றே மக்னீஷியமும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியம். எலும்புகளின் மேற்புறத்தில் சேமிக்கப்படும் மக்னீஷியம் நச்சுக்களை உடலுக்குள் நுழைவதை தடுத்து இரத்த நாளங்கள் மற்றும் தசைகளை தளர்வடைய செய்கிறது. மக்னீஷியம் குறைந்தால் தலைவலி மற்றும் சில ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படக்கூடும்.

பற்கள் ஆரோக்கியம்

மக்னீஷியம் தேவையான சத்துக்களையும் வழங்குகிறது.  ஈறுகள் மற்றும் பற்களை வலிமையாக்குகிறது.

முடி ஆரோக்கியம்

முடி நிறத்திற்கு அவசியமான காப்பர் அதிகளவு உள்ள முந்திரி அடர்த்தியான கருப்பு நிற முடியை வழங்கும்.

எடை இழப்பு

முந்திரியில் நல்ல கொழுப்புகள் உள்ளன. வாரம் இருமுறை முந்திரி பருப்பு சாப்பிடுபவர்களின் உடல் எடையை பராமரிக்கிறது

கெல்லோஸ்டோனை குறைக்கிறது

தினமும் முந்திரி சாப்பிடும் பெண்களுக்கு கெல்லோஸ்டோன் நோய் ஏற்படும் வாய்ப்புகள் 25 சதவீதம் குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது.

செரிமானம்

முந்திரியில் செரிமானத்திற்கு தேவையான அமிலங்கள் உட்பட நன்மையளிக்கும் பல அமிலங்கள் உள்ளன.

தூக்கம்

முந்திரி நிம்மதியான தூக்கத்தை வழங்கக்கூடியது. பெண்கள் மாதவிடாய் காலத்திலும், பின்னரும் முந்திரி சாப்பிடுவது வலி இல்லாத நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.

புற்றுநோய் பாதுகாப்பு

முந்திரியில் உள்ள புரோனோகானைடின் என்ற மூலக்கூறு புற்றுநோய் செல்களை அழிப்பதுடன் அவற்றின் வளர்ச்சியையும் தடுக்கிறது. காப்பர் மற்றும் பைட்டோகெமிக்கல்ஸ் புற்றுநோய் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios