cashback offer introduced in icici

வங்கி வீட்டுக் கடன் வசதியில் "கேஷ் பேக் சலுகை"

அனைவருக்குமே சொந்த வீடு வாங்குவது என்பது ஒரு பெரிய கனவாக இருக்கும், இன்றைய கால கட்டத்தில் ஒருவீடு வாங்க வாங்குவது என்பது பெரிய சவால் தான். அதனையும் மீறி வீடு வாங்கும் போது கடன் வாங்குவது என்பது சாதாரண ஒன்றாகத்தான் உள்ளது

அவ்வாறு வாங்கும் கடனுக்கான வட்டியும் சற்று அதிகமாகத்தான் இருக்கும். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், கடன் வாங்கத்தான் செய்கிறோம்.

இந்நிலையில் வீட்டு கடன் வாங்குவதில்,ICICI வங்கி வீட்டுக் கடன் வசதியில் கேஷ் பேக் எனும் சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கடன் பெறுபவர்கள் கட்டும் ஒவ்வொரு மாதத் தவணையிலும் 1 சதவீத தொகை சேமிக்கப்பட்டு அத்தொகை முதன் முறை 36-வது மாதத்திலும் அடுத்தடுத்த முறைகளில் 12 மாதங்களுக்கு ஒரு தடவையும் வாடிக்கையாளர் வங்கி கணக்குக்குத் திருப்பி அளிக்கப்படும். அல்லது திரும்ப கிடைக்கும் தொகையை மீதமுள்ள கடன் தொகையாக செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த சிறப்பு சலுகை, 15 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை எவ்வளவு வீட்டுக்கடன் வாங்கியிருந்தாலும், இந்த 1% கேஷ் பேக் சலுகையைப் பெற முடியும் என ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது