Budhan Peyarchi 2022: இந்த மே 10 ஆம் தேதி புதன் கிரகம், ரிஷபத்தில் பிற்போக்குத்தனமாக செல்கிறார். ஆகவே, இந்த ராசி மாற்றத்தால் எந்ததெந்த ராசிகளுக்கு பணம் மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் முன்னேற்றம் காணப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
புத்தி மற்றும் பேச்சின் கடவுளாக கருதப்படும் புதன்.2022 கடந்த ஏப்ரல் 08 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசியில் இடம் மாறியுள்ளார். இதையடுத்து, இந்த மே 10 ஆம் தேதி புதன் கிரகம், ரிஷபத்தில் பிற்போக்குத்தனமாக செல்கிறார். ஆகவே, இந்த ராசி மாற்றத்தால் எந்ததெந்த ராசிகளுக்கு பணம் மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் முன்னேற்றம் காணப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் கல்வியில் கவனத்துடன் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். நீங்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும். எதிலும், துணிச்சலுடன் இருப்பது அவசியம்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உண்டாகும். மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வழி சொந்தங்களின் உறவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமாக அமையும். கல்வி தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பயணங்களை மேற்கொள்வீர்கள்.உடல்நலம் மேம்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கேற்ற பாராட்டு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். எதிலும், பொறுமையுடன் செயல்பட வேண்டும். இளைய சகோதரர்கள் வழி ஆதரவாக செயல்படுவார்கள்.
சிம்மம்:
சிம்மம் ராசியினருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி வரும் . சொத்துக்கள் விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான விஷயங்களில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை கிடைக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்கள், பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். அக்கம், பக்கத்தில் இருப்பவர்கள் துணையாக நடந்து கொள்வார்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு, வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். அறிவியல் சார்ந்த விஷயங்களில் மாணவர்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமான சூழல் உண்டாகும். சுயதொழில் சார்ந்த செயல்பாடுகளில் பண நெருக்கடிகள் ஏற்படும்.
விருச்சகம்:
விருச்சகம் ராசியில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத சூழல் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதங்கள் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலை உண்டாகும். இழுபறியாக இருந்து வந்த செயல்கள் முடிவடையும்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு எதிர்பாராத சில நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் முயற்சிகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.
மகரம்:
மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு, இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் எதிர்பாராத ஆதரவு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளால் மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும்.
கும்பம்:
கும்பம் ராசியில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனை மற்றும் வாகனம் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் ஏற்படும். உயர்நிலை கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமைகள் ஏற்படும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.
மீனம்:
மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு, உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சுப காரியங்கள் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். எதிலும், துணிச்சலுடன் செயல்படுங்கள்.
