Horoscope: இந்த மே மாதத்தில் சுக்கிரன், சூரியன், புதன் மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்கள் தனது ராசியை மாற்றப் போகிறார்கள். இந்த மே மாதத்தில் ஏற்படும் 4 கிரகங்களின் மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மே மாதம் சிறப்பு பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த மே மாதத்தில் சுக்கிரன், சூரியன், புதன் மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்கள் தனது ராசியை மாற்றப் போகிறார்கள்.
ஜோதிட சாஸ்திரப்படி, சூரியன் 2022 மே 15 ஆம் தேதி தனது ராசியை மாற்றி மேஷ ராசிக்கு செல்கிறார். அதேபோன்று, கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ஏற்கனவே கும்பம் ராசியில் பயணித்து வருகிறார். இதையடுத்து, தனது ராசியை மாற்றி மே 17ம் தேதி மீன ராசிக்கு செல்கிறார்.
அதேபோன்று, மே மாத இறுதியில் அதாவது மே 23ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்கிறார். இதனுடன், மே 10 ஆம் தேதி, புதன் கிரகமும்சுக்கிரன் ஆளும் ரிஷபத்தில் பிற்போக்குத்தனமாக செல்கிறார். எனவே, இந்த மே மாதத்தில் ஏற்படும் 4 கிரகங்களின் மாற்றம் எந்ததெந்த ராசிகளுக்கு சிறப்பான பலன்களை தரும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
மேஷம்:
மே மாதத்தில் ஏற்படும் நான்கு கிரகங்களின் ராசி மாற்றம், மேஷத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நல்ல பலன் தருகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தொட்டது துலங்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எடுத்த காரியம் நல்ல முடிவை தரும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு மே மாதத்தில் ஏற்படும் நான்கு கிரகங்களின் ராசி மாற்றம், காரணமாக சற்று கவனமாக இருப்பது அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிரிகள் சூழ்ந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மே மாதத்தில் ஏற்படும் நான்கு கிரகங்களின் ராசி மாற்றம், மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இனிமையான பலன்களை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. மற்றவர்களிடம் தேவையற்ற பேச்சு வார்த்தைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு மே மாதத்தில் ஏற்படும் நான்கு கிரகங்களின் ராசி மாற்றம், எதிலும் துணிச்சலுடன் நடந்து கொள்வீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் துவங்கும் எண்ணத்தில் வெற்றிகள் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். திடீர் பணப்புழக்கம் இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு மே மாதத்தில் ஏற்படும் கிரகங்களின் ராசி மாற்றம், நல்ல நாளாக இருக்கும். இந்த நாள் உங்களுடைய குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். உங்களுடைய திறமைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு மே மாதத்தில் ஏற்படும் கிரகங்களின் ராசி மாற்றம், இந்த நாள் நீங்கள் எதிர்பாராத திடீர் மாற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்குலாபம் கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு மே மாதத்தில் ஏற்படும் கிரகங்களின் ராசி மாற்றம், இனிய பலன்கள் கிடைக்க கூடிய நல்ல நாளாக இருக்கும். எடுத்த முடிவில் இருந்து உறுதியாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார உயர்வும் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு மே மாதத்தில் ஏற்படும் கிரகங்களின் ராசி மாற்றம், எடுத்த முடிவுகளில் உறுதியாக செயல்படுவீர்கள். உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு சாதகமாக செயல்பட கூடும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு நல்ல பலன் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு மே மாதத்தில் ஏற்படும் கிரகங்களின் ராசி மாற்றம், உங்களுக்கு புது பொலிவு தென்படும். எதிலும், இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் கூடும். பெற்றோர்களின் உதவி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை தள்ளிப் போடுவது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு மே மாதத்தில் ஏற்படும் கிரகங்களின் ராசி மாற்றம், உங்களுக்கு பிடித்த விஷயங்கள் நடைபெறும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு மே மாதத்தில் ஏற்படும் கிரகங்களின் ராசி மாற்றம், எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பு ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு மே மாதத்தில் ஏற்படும் கிரகங்களின் ராசி மாற்றம், உங்களுக்கு மகிழும் படியான நல்ல நிகழ்வுகள் நடக்க இருக்கிறது. வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். புதிய யுத்திகளை கையாளுவது சிறப்பாகும். திருமண யோகம் கைகூடும்.
