கத்தரிக்காய் சாதம் சாப்பிடு இருக்கீங்களா? ட்ரை பண்ணி பாருங்க.. ரெசிபி இதோ!
Brinjal Rice Recipe : சுவையான கத்தரிக்காய் சாதம் செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
பொதுவாகவே கத்தரிக்காய் குழம்பு கூட்டு பொரியல் என்று வைத்து தான் நீங்கள் சாப்பிட்டு இருப்பீர்கள். அப்படியானால் கத்தரிக்காயில் சாதம் செய்து சாப்பிட்டு இருக்கிறீர்கள். கர்நாடகாவில் இதை வாங்கிப் பார்த்து என்று சொல்லுவார்களாம். எத்தனை நாளைக்கு தான் ஒரே மாதிரியான சாம்பார், ரசம் என்று வைத்து சாப்பிடுவீர்கள். ஒரு முறை இந்த வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிடுங்கள்.
இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. மிகவும் சுலபமான முறையில் செய்து முடித்துவிடலாம். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ரெசிபி செய்து கொள்ளுங்கள். அவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு கூட மதிய உணவாக லஞ்ச் பாக்ஸில் அடைத்து கொடுக்கலாம். சரி வாங்க எப்போது இந்த பதிவில் கத்தரிக்காய் சாதம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: காளான் வாங்குனா ஒன் டைம் இப்படி புலாவ் செஞ்சு சாப்பிடுங்க.. சுவையா இருக்கும்!
கத்தரிக்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள் :
உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
கத்தரிக்காய் - 5 (நீளமாக வெட்டியது)
கெட்டியான புளி சாறு - 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
வேர்க்கடலை - 1 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 1 ஸ்பூன்
பொடி தயாரிக்க தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி விதை - 1 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 5
தேங்காயை துருவல் - 3 ஸ்பூன்
கசகசா - 1/4 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1/2 ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
இதையும் படிங்க: கமகமன்னு மணக்கும் பூண்டு சாதம்.. ஒருமுறை செஞ்சு பாருங்க.. ருசியா இருக்கும்!
செய்முறை :
கத்தரிக்காய் சாதம் செய்ய முதலில் அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மசாலா தயாரிக்க எடுத்து வைத்த அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக வறுக்கவும். கடைசியாக தேங்காய் துருவலை போட்ட வேண்டும். இப்போது இவை அனைத்தையும் ஆற வைத்து பிறகு மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றாமல் பொடியாக அரைத்து எடுக்கவும். இந்த மசாலாவை நீங்கள் எண்ணெய் ஊற்றாமல் வறுத்தால், பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து பயன்படுத்தலாம் கெட்டுப் போகாது.
இப்போது ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை வேர்க்கடலை முந்திரி பருப்பு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பிறகு அதில் வெட்டிய வெங்காயத்தை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்ததாக அதில் கத்தரிக்காய் சேர்த்து ரெண்டு நிமிடம் மறக்கவும் புளிக்கரைசலை சேர்க்கவும். இப்போது இதில் வறுத்து வைத்த மசாலா பொடி சேர்க்கவும். இதனுடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் வடித்து வைத்து சாதத்தை அதில் சேர்த்து நன்கு கிளறவும். இறுதியாக ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் கத்தரிக்காய் சாதம் தயார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D