Asianet News TamilAsianet News Tamil

கமகமன்னு மணக்கும் பூண்டு சாதம்.. ஒருமுறை செஞ்சு பாருங்க.. ருசியா இருக்கும்!

Garlic Rice Recipe : காரசாரமான சுவையில் பூண்டு சாதம் சுலபமாக செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

poondu sadham or garlic rice recipe in tamil mks
Author
First Published Sep 18, 2024, 2:37 PM IST | Last Updated Sep 18, 2024, 2:37 PM IST

எப்போதும் மதியம் சாதம், குழம்பு, கூட்டு, பொரியல் என்று சாப்பிட்டு போரடித்து விட்டதா? அப்படியென்றால் இன்று மதியம் வெரைட்டி ரைஸ் ஏதாவது சாப்பிடு நினைக்கிறீகளா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான். பொதுவாக வெரைட்டி ரைஸில் பல வகைகள் உண்டு. உதாரணமாக புளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், முட்டைக்கோஸ் ரைஸ், கேரட் ரைஸ், வெஜிடபிள் ரைஸ், பன்னீர் ரைஸ், கேப்ஸிகம் ரைஸ் என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த லிஸ்டில் பூண்டு சாதமும் உண்டு இதுவரை நீங்கள் பூண்டு சாதம் சாப்பிடவில்லை என்றால் இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

இந்த பூண்டு சாதம் காரசாரமான சுவையில், சாப்பிடுவதற்கு ரொம்பவே டேஸ்ட்டாக இருக்கும். முக்கியமாக இந்த பூண்டு சாதம் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது, ரொம்பவே சீக்கிரமாகவே செய்து முடித்து விடலாம். மேலும் இது ஆரோக்கியமானதும் கூட. மதியம் உணவாக குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸிற்கு இந்த பூண்டு சாதத்தை செய்து கொடுங்கள். அவர்கள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். பேச்சிலர்கள் கூட இந்த பூண்டு சாதத்தை செய்யலாம். சரி வாங்க இப்போது இந்த பதிவில் பூண்டு சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இதையும் படிங்க:  10 நிமிடத்தில் சுவையான கேரட் சாதம் இப்படி செய்ங்க.. செமையா இருக்கும்!

பூண்டு சாதம் செய்வதற்கு தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - 2 கப் ( உதிரியாக வடித்து எடுத்தது)
பூண்டு - 100 கிராம்
எண்ணெய் - 3 ஸ்பூன்
நெய் - 1 1/2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1
பிரியாணி இலை - 1
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - 4 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கு ஏற்ப
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
புதினா - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

இதையும் படிங்க:  10 நிமிடத்தில் முட்டைக்கோஸில் இப்படி செஞ்சி கொடுங்க.. கொஞ்சம் கூட மிஞ்சாது!

செய்முறை :

பூண்டு சாதம் செய்ய முதலில், எடுத்து வைத்த பூண்டை தோலுரித்து நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு அகலமான கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி சூடாக்கவும். அவை நன்றாக சூடானதும் அதில் பூண்டை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். கருகிவிடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வருத்தப்பூண்டில் கொஞ்சம் மட்டும் தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

அடுப்பில் எண்ணெயும் பூண்டும் இருக்கும். எனவே அதில் சீரகம், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். அதன் பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் கேரட், பீன்ஸ், குடைமிளகாய் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.

காய்கறிகள் முக்கால் பதத்திற்கு வென்றவுடன் அதில் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அதில் மிளகாய் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்துக் கொள்ளுங்கள். இறுதியாக எடுத்து வைத்த சாதத்தை இதனுடன் சேர்ந்து நன்கு கிளறி விடுங்கள். பிறகு அதை 5 நிமிடம் அடுப்பில் அப்படியே வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வையுங்கள். இப்போது தனியாக எடுத்து வைத்த பூண்டை சாதத்தின் மேல் தூவி விடுங்கள். மேலும் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையையும் தூவி விடுங்கள். அவ்வளவுதான் சுவையான பூண்டு சாதம் ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios