படத்துல கூட இப்படி காதலை வெளிப்படுத்த முடியாது... ஆனால் ஈபிள் டவர் முன் "இந்திய ஜோடியை" பாருங்க..! 

காதல் காட்சிகள் என்றால் படத்தில் மட்டும் தான் பார்க்க முடியும் என்ற காலம் எல்லாம் மலையேறி விட்டது. இப்போதெல்லாம் அத்தனையும் விஞ்சும் அளவுக்கு இயற்கை அழகு மிக்க பல இடங்களில் போட்டோ ஷூட் செய்வது முதல் ஆல்பம் சாங்ஸ் பாடல் வரை செய்து அதன் மூலம் தங்களை அழகுப்படுத்தி கொள்கின்றனர்.

அந்த வகையில் தற்போது ஈபிள் டவர் முன்பு தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

நியூயார்க்கை சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் சியாம் ஷா, மும்பையில் பணிபுரியும் பெண் சிவானி பாப்னா. இவர்கள் இருவரும்  கடந்த  ஒன்றரை ஆண்டுகளாக நண்பர்களாகபழகி வந்தனர். பின்னர் அது காதலாக மாறி உள்ளது. 

இதனை தொடர்ந்து வித்தியாசனமான  முறையில் தன் காதலை வெளிப்படுத்த திட்டமிட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவர் முன்பு சிவானியிடம் காதலை தெரிவிக்கிறார்.

அப்போது ஹிந்தி பட பாடல்களை தனது நண்பர்கள், குடும்பத்தினர் முன்பு பாடிக்கொண்டே மோதிரத்தை காதலிக்கு சியாம் ஷா அணிவிக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளத்தில் வைரலாக பரவி வருகிறது.