மாற வேண்டிய அவசர நிலை..!  மறவாதீர் "இளநீர்"...! 

கோடை காலம் நெருங்கி விட்டதால் இப்போதே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக போகும் வழியிலும் வரும் வழியிலும் கண்ணெதிரே கலர்கலராக பாட்டிலில் விற்கப்படும் கூல் ட்ரிங்க்ஸ் தெரிகிறது அல்லவா?  இதனை விருப்பமாக வாங்கி அருந்தி பயனடைகின்றனர் மக்கள். ஆனால் இது உடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை உணர்வதில்லை.

இதற்கு பதிலாக வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும், அதேவேளையில் உடலில் சூட்டை குறைக்க மிக முக்கியமாக அருந்த வேண்டியது இளநீர், தர்பூசணி,பழச்சாறுகள் தான்.

இளநீர் அருந்துவதால், அதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம் என அனைத்தும் நமக்கு பேருதவியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வயிற்றுப்போக்கினை சரி செய்யும்.நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும், உடல் சூட்டையும் குறைக்கும், வாதத்தை கட்டுப்படுத்தும், சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கும், சருமத்தை பொலிவாக்கும். ரத்தசோகை வராமல் தடுக்கும். சீரண மண்டலத்தை சரிவர இயக்க வைக்கும்.இப்படி பல்வேறு பலனை தரக்கூடியது இளநீர்.

எனவே கோடைக்காலத்தில் இளநீர் அருந்துவது மிகவும் நல்லது. இது தவிர்த்து பல வகை பழங்கள், குளிர்ந்த மோர், தர்பூசணி,கூழ் உள்ளிட்ட மற்ற விஷயங்களையும் எடுத்துக் கொள்ளலாம். மறந்தும் கடைகளில் விற்கக்கூடிய பாட்டிலில் அடைத்து வைக்கப்படும் கூல்டிரிங்ஸ் குடிப்பதால் உடலுக்கு தீங்கு ஏற்படுவதுடன் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். எனவே ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதே சிறந்தது. இதனை தான் மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.