Asianet News TamilAsianet News Tamil

Weight Loss Tips: உடல் எடையை மடமடவென குறைக்க உதவும் கிவி...ஒருமுறை ட்ரை பண்ணுக்கோ..? பெஸ்ட் ரிசல்ட் உறுதி..

Weight Loss Tips: குறைந்த கலோரிகளை கொண்டிருக்கும், கிவி உடல் எடையை மடமடவென குறைக்க உதவுகிறது. அவை எந்தெந்த வழிமுறைகள் என்பதை கீழே பார்த்து தெரிந்து வைத்து கொள்ளலாம்.

Benefits of eating kiwi for weight loss
Author
Chennai, First Published Jun 15, 2022, 1:29 PM IST

இன்றைய நவீன கால கட்டத்தில், உடல் எடை அதிகரிப்பு என்பது, நம்மில் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் மிக பெரிய பிரச்சனையாகும். அதிகரித்து வரும் உடல் எடையை கட்டுப்படுத்த  உணவுக் கட்டுப்பாட்டுடன், உடற்பயிற்சியும் பரிந்துரைக்கப்படுகிறது. அவற்றில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.

Benefits of eating kiwi for weight loss

கிவி பழத்தை உட்கொள்வதன் மூலம், அதிகரித்து வரும் எடையை எளிதாக கட்டுப்படுத்தலாம். நீங்கள் கிவி பழம் மூலம் உடல் எடையை குறைக்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். 

எந்தெந்த வழிகளில் கிவியை உட்கொள்ளலாம்:

முதலில், கிவியை தோல் நீக்கி தயிர், பாதம், தேன் சேர்த்து ஸ்மூத்தியாக உட்கொண்டால் உடல் எடை விரைவாக குறையும். சாலட் தொகுப்பில் கிவி பழத்தை சேர்த்து சாப்பிடலாம். கிவியை தோலுரித்து பொடியாக நறுக்கி மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைத்து பானமாகவும் உட்கொள்ளலாம்.

கிவி பழத்தை உட்கொள்வதால்  உடலில் ஏற்படும் நன்மைகள்:

Benefits of eating kiwi for weight loss

1. கிவி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. சரும பளபளப்பு அதிகரிக்கும். சுருக்கங்கள் நீங்கும். 

2. அல்சரால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து கிவியை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். கிவியில் இரும்புசத்து மற்றும் போலிக் அமிலம் நிறைந்துள்ளது.இதன் காரணமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.

3. இதய நோய், இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு கிவி மிகவும் நன்மை பயக்கும்.

4. மேலும், வயிற்றில் ஏற்படும் உஷ்ணம் மற்றும் அல்சர் போன்ற நோய்களை நீக்குவதில் கிவி மிகவும் பயனுள்ள பழமாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க....Right father age: ஆண்களுக்கு ஓர் குட்நியூஸ்.. அப்பாவாக சரியான வயது தெரியுமா..? ஆய்வில் வெளிவந்த புதிய தகவல்...

Follow Us:
Download App:
  • android
  • ios