"பெல்பாட்டம் பேண்ட்" தான் பெரிய பேஷன்..! அமைச்சரின் அதிரடி போஸ்ட்..! 

என்னதான் நாம் ஆடம்பர வாழ்க்கைக்கு மாறிவிட்டாலும், கலாச்சாரம் மாறி விட்டாலும், உண்ணும் உணவு பழக்க பழத்தில் மாறிவிட்டாலும்..."காலம் பொன் போன்றது", "ஓல்ட் இஸ் கோல்ட்" என சொல்வார்களே, அதற்கெல்லாம் உதாரணமாக அமைந்து விட்டது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் ஓர் பதிவு 
 
அமைச்சர் ஜெயக்குமார் என்றாலே அவர் பேசும் எதுகை மோனை பேச்சும், எதையும் டென்ஷன் ஆகாம கூலாக பதில் அளிப்பதும், ஆடல் பாடல் என மேடைகளில் அதிரடி கிளப்புவதும், விளையாட்டு மைதானத்தில் இறங்கினால் அது கால் பந்தாக இருந்தாலும் சரி, கிரிக்கெட்டாக  இருந்தாலும் சரி களத்தில் இறங்கி துவம்சம் செய்வதில் வல்லவர்

நடுக்கடலில் விட்டாலும் நீந்தியே வந்து கரை சேரும் அளவுக்கு நீச்சல் அடிப்பதிலும் வல்லவர். அவ்வளவு ஏன்? கடந்த 2001 ஆம் ஆண்டு, "மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான" கிரிக்கெட் போட்டியில் ஆட்டநாயகன் விருதை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் பெற்று உள்ளார் என்றால் பாருங்களேன்...

இது ஒரு பக்கம் இருக்க.. 80- களில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட "பெல்பாட்டம் பேண்ட்" அணிந்து வணக்கம் சொல்லியவாறு எடுக்கப்பட்ட ஒரு பழைய போட்டோவை மலரும் நினைவுகளாக சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

அதில்,

80- களில் "பெல்பாட்டம் பேண்ட்" தான் பெரிய பேஷன்..! அப்போது எடுத்த புகைப்படத்தை, இப்போது திரும்பி பார்த்தால் பல இனிமையான விஷயங்கள் மனதிற்குள் நிழலாடுகிறது..! என குறிப்பிட்டு உள்ளார்.

அந்த போட்டோ உங்களுக்காக..!