விஜய் நடிப்பில், 'பீஸ்ட்' படத்திலிருந்து காதலர் தினத்தன்று வெளியான ''அரபிக் குத்து'' பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி பிரபலம் அடைந்தது. இதையடுத்து, பலரும் இதற்கு குத்தாட்டம் போட்டு வருகின்றனர். 

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் (Anirudh) இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படம்அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.வருகிற ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ (Arabic kuthu) என்கிற பாடலின் புரோமோ கடந்த சில தினங்களுக்கு முன் வித்தியாசமான முறையில் அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் நெல்சன் மூவரின் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்து செய்யும் விதமாக பிப்ரவரி 14 காதலர் தின ஸ்பெஷலாக இப்பாடல் வெளியிடப்பட்டது.

சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில், அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடிய இப்பாடல் வெளியானது முதலே, பலரது வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளில் 'ஹலமதிஅபிபு' தான் பரவலாக ஒலித்து கொண்டிருக்கிறது. இப்பாடலின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது விஜய்யின் (Vijay) மெர்சலான நடனம் தான். ஸ்டைலிஷ் லுக்கில் அவர் போடும் துள்ளல் நடனத்தை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்க, பாடலும் வைரல் ஆனது. 

பொதுவாக ஒரு பாடல் ட்ரெண்டானாலே அதனை பலரும் ரீல்ஸ் செய்ய தொடங்கிவிடுவார்கள். அப்படி இருக்கையில் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய 'அரபிக்குத்து' பாடலை மட்டும் ரசிகர்கள் சும்மாவா விடுவார்கள். சிறிய குழந்தை முதல் முதியவர்கள் வரை பலரும் உற்சாகமுடன் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து மேலும் பாடலை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இந்த பாடலில் விஜய், மெர்சலான ஸ்டைலிஷ் லுக்கில் போடும் துள்ளல் நடனத்தை, கடும் வெயிலடிக்கும் பாலைவனத்தில் ஒட்டகத்தை அருகில் வைத்துக்கொண்டு ஷேக்குகள் சிலர் ரீகிரியேட் செய்துள்ளனர். ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது, வைரலாகி வருகிறது. 

Scroll to load tweet…

அதனை தொடர்ந்து, இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங்காக இருக்கும் அக்ஷய் அவரது பாட்டியுடன் இந்த பாடலுக்கு மகிழ்ச்சியுடன் நடனமாடி பலரது கவனத்தியும் ஈர்த்து வருகின்றனர். 

Scroll to load tweet…

மேலும், ஒரு குழந்தை அழகாக உடை அணிந்துகொண்டு தனது மழலை கொஞ்சும் சிரிப்பில் 'அரபிக்குத்து' பாடலுக்கு நடனமாடிய வீடியோ பலரையும் ஈர்த்துள்ளது. இதுபோன்ற பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

''அரபிக் குத்து'' பாடல் வெளியான மூன்று நாட்களில் 38 மில்லியன்களுக்கும் அதிகமான பார்வையாளர்களை கொண்டு சாதனை படைத்தது. யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பாடலுக்கு 25 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்திருக்கிறது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

Scroll to load tweet…

முன்னதாக, இவர்கள் கூட்டணியில் இதற்கு முன் வெளியான செல்லம்மா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அரபிக் குத்து பாடலும் அமோக வரவேற்பை பெற்றது என்பதும்.நெல்சன் தயாரிப்பில் உருவான முதல் திரைப்படமான கோலமாவு கோகிலா மற்றும் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்ட்டர் திரைப்படங்கள் வெற்றியடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.