ஓடும் ஆட்டோவில், பெண் பயணியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் ஆட்டோ ஓட்டுநர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவில் பெண் பயணியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள ஆட்டோ ஓட்டுனரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து உள்ளனர். லக்னோவில் உள்ளது கோமதி நகர்.இந்த நகரில் ஒரு பெண் பயணியை அருகில் இருந்த ஆட்டோவில் ஏறி உள்ளார்.

அவரிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் அந்த ஓட்டுனர். பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு, அருகில் இருந்த மக்கள் ஒன்று கூடி அவனை பிடித்து தாறுமாறாக அடித்து உதைத்தனர். 

இதற்கிடையில், அந்த கயவனிடமிருந்து தப்பிக்க அப்பெண் ஆட்டோவில் இருந்து குதித்து உள்ளார். இதில் காயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் இதுபோன்ற சம்பவங்களுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இருந்தாலும் இவர்களுக்கெல்லாம் கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.