are you ready to eat gulpi

அன்றும் இன்றும் என்றும் குல்பி ஐஸ்...எல்லோருக்குமே பிடித்த ஐஸ் குல்பி தானே...

இன்றளவும் குல்பி ஐஸ்கு இருக்கும் மவுசு வேறு எதற்கும் கிடையாது என்று கூட சொல்லலாம்....சரி வாங்க குல்பி ஐஸ் க்ரீம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்...

தேவையான பொருட்கள் :

பால் – 2 லிட்டர்
முந்திரி – 15 கிராம்
பாதாம் – 15 கிராம்
பிஸ்தா – 15 கிராம்
ஐசிங் சுகர் – 200 கிராம்
கார்ன்ப்ளேவர் – 1 மேசைக்கரண்டி, ஜெலட்டின் – 2 தேக்கரண்டி
ரோஸ் எசன்ஸ் – 1 தேக்கரண்டி
செய்முறை :

முதலில் தேவையான அளவில் பாலை எடுத்துக்கொண்டு சுருண்டும் வரை சூடேதேற்றவும்

பால்வற்றி வரும் போது சர்க்கரை போடவேண்டும்.பின் அடுப்பிலிருந்து இறக்கி, சிறிது பாலை எடுத்து அதில் கார்ன்ப்ளேவரை கரைத்து பாலில் மீண்டும் ஊற்றி மெதுவாக சுருண்ட செய்யவும்

நன்கு கெட்டியானதும் இறக்கவும்.

பாதாம், பிஸ்தா, முந்திரியை தண்ணீரில் ஊறவைத்து சிறிது பாலை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

ஜெயல்ட்டினை 50 மில்லி சூடான தண்ணீரில் கரைத்துக் கொண்டு கெட்டியான பாலில் முந்திரி கலவை,ஜெலட்டின்,ரோஸ் எசன்ஸ் எல்லாவறையும் சேர்த்து நன்கு கலக்கி குல்பி மோல்டில் ஊற்றி ப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது எடுத்து சாப்பிடலாம்

நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு நாமே இதனை செய்து தருவதால் குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள்