சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும்.ஒரு சிலருக்கு அந்த ஆசை  விரைவில் நடக்கும். சிலருக்கு சில காலம் எடுத்துக் கொள்ளும்

அவ்வாறு வீடு கட்ட வேண்டும் என முடிவெடுத்துவிட்டால், அதற்கான பூமி பூஜை என்பது மிகவும்  முக்கியமான  ஒன்று.

வருடத்தில் எட்டு முறைகள்  மட்டும் தான் வாஸ்து நாள்வரும்.இந்நாளில் பூமி பூஜை செய்வது நல்லது. ஒரு வேளை பூமி பூஜை செய்வதற்கு  இந்த எட்டு நாட்களையும் தவறவிட்டிருந்தால், வேறு எந்த  நாட்களில் பூமி பூஜை செய்யலாம் என்பதை பார்க்கலாம்

மனையின் உரிமையாளர் நட்சத்திரத்திற்கு உகந்த முகூர்த்த நாளில், வளர்பிறை சுப நேரத்தில் மனையின் பூமி பூஜை செய்யலாம்.

அதே சமயத்தில் பூஜை நாள் மனையின் உரிமையாளர் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம தினமாக  இருக்கக்கூடாதே என்பது  குறிப்பிடத்தக்கது  

பூமி பூஜை செய்ய உகந்த மாதங்கள்

வைகாசி, ஆவணி, கார்த்திகை, தை, மாசி போன்ற மாதங்கள் உகந்ததாக உள்ளது

நாட்கள்                                  

புதன், வெள்ளி, வளர்பிறை திங்கள்கிழமை, வியாழன் ஆகிய கிழமைகளில் பூமி பூஜை  செய்யலாம்  என  தெரிவிக்கப்பட்டுள்ளது

மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் பூமி பூஜை செய்தால், செல்வ செழிப்போடு வாழலாம்