முதல்வர் எடுத்த அதிரடி முடிவால் அசந்து போன "மற்ற மாநிலங்கள்"! தேவைப்பட்டால் "அவர்களையும்" பயன்படுத்துவோம்!

இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1200 கும் அதிகமாக உள்ளதால், அந்தந்த மாநில அரசுகள் மும்முரமாக பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

நோய் பரவுவதை கட்டுப்படுத்த அனைத்து விதங்களிலும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அனைத்து தனியார் மருத்துவமனைகளும் அரசின் கீழ் செயல்படும் என குறிப்பிட்டு உள்ளார்.

தற்போது வரை ஆந்திர மாநிலத்தில் மட்டும் 23 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அரசு இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்து உள்ளது அரசு 

இது தவிர தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அரசாங்கத்தின் கீழ் செயல்பட உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு நிலவரத்தின் அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவில் உள்ள மருத்துவர்களையும் தேவைப்பட்டால் அரசு  பயன்படுத்திக்கொள்ள உள்ளதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளது அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

கொரோனாவுக்கு எதிராக இந்த உலகமே போராடி வந்தாலும் இந்தியா எதிர்கொள்ளும் விதம் அனைவராலும்  உற்றுநோக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு படி மேலே சென்று  ஒவ்வொரு மாநிலம் எடுக்கும் முடிவுகள்  அனைவரையும் அசர வைக்கும் அளவுக்கு உள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசும் இப்படி தான் பல அதிரடி முடிவுகளை அறிவித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கிறது