மிகவும் எளிமையாக நடந்து முடிந்த ஆனந்த் அம்பானி கல்யாணம்.. என்னது எளிமையா? ஆமா.. நீங்க நம்பலனாலும் அதான் நிஜம்!

Anant Ambani Wedding : இந்தியா மட்டுமல்ல, இந்த உலகமே வியந்து பார்த்த ஒரு திருமணம் என்றால் அது நிச்சயம் ஆனந்த் அம்பானியின் திருமணமாகத் தான் இருக்கும்.

Anant and Radhika wedding is the simplest wedding happened what survey says ans

ஆனந்த் ராதிகா ஜோடி 

கடந்த சில வருடங்களாவே காதல் வயப்பட்டிருந்த ஜோடி தான் ஆனந்த் மற்றும் ராதிகா ஜோடி, முகேஷ் அம்பானி அளவிற்கு இல்லை என்றாலும், ராதிகாவின் தந்தை விரேன் மெர்ச்சண்ட்டும் பெரிய பணக்காரர் தான். அப்படி இருக்க, கடந்த 2023ம் ஆண்டு துவக்கத்தில் இரு வீட்டார் முன்னிலையில் ஆனந்த், ராதிகா ஜோடிக்கு நிச்சயம் நடந்து முடிந்தது. உண்மையில் சொல்லப்போனால், பலருக்கு அவர்களின் நிச்சயம் நடந்தே தெரியாது. 

திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள்

இந்த சூழலில் தான் சில மாதங்களுக்கு முன்பு, ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமண ஏற்பாடுகள் நடக்க துவங்கியது. இந்தியாவில் தொடங்கிய அந்த சுப நிகழ்வுகள், இத்தாலி நாட்டு கடற்கரை வரை நீண்டது. 3 நாள்கள், இத்தாலி நாட்டு கடலில், பல பிரபலங்கள் முன்னிலையில் ஆனந்த், ராதிகா ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடைபெற்றது. 

தகதகவென மின்னிய நீதா அம்பானி! ரேகா ஸ்டைலில் அசர வைத்த ஹைதராபாத் குர்தா, காடா துப்பட்டா!

மும்பையை புரட்டிப்போட்ட கல்யாணம் 

உலகமே சில தினங்கள், மும்பைக்கு குடியேறது என்றால் அது மிகையல்ல, காரணம் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் கிம் கர்தாஷியன் வரை பல டாப் நட்சத்திரங்கள் பங்கேற்றனர். ஜான் சீனா ஒரு பக்கம், கிரேட் காளி மறுபக்கம், தோனி போன்ற கிரிக்கெட் வீரர்கள் ஒருபுறம், அரசியல் தலைவர்கள் மறுபுறம் என்று, இதுவரை இப்படி ஒரு திருமண விழாவை பார்த்ததே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நடைபெற்றது அந்த கல்யாணம். 

ஆனந்த் அம்பானியின் கல்யாண செலவு?

உலக புகழ்பெற்ற பாடகர் ஜஸ்டின் பீபர் இந்தியாவிற்கு வந்து, ஆனந்த் கல்யாணத்தில் பாடியதற்கு அவருக்கு சுமார் 80 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் 10 முதல் 25 கோடி பெற்றுக்கொண்ட பல பாப் இசை கலைஞர்கள் திருமணத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. ஆகவே Pre-Wedding, சாப்பாடு மற்றும் திருமணம் என்று சுமார் 5000 முதல் 5500 கோடி ரூபாய் ஆனந்த் திருமணத்திற்கு செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

எளிமையாக நடந்த ஆனந்த் ராதிகா கல்யாணம்

ஏன்பா, 5500 கோடியில் நடந்த கல்யாணம், எளிமையான கல்யாணமான்னு நீங்கள் கேட்பது சரி தான். ஆனால் அண்மையில் வெளியான சில புள்ளி விவரங்கள்படி, சராசரியாக ஒரு இந்திய குடும்பம், தங்களின் சொத்து மதிப்பில் சுமார் 10 முதல் 18 சதவிகிதத்தை தங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்கு செலவு செய்கின்றனர். அதாவது ஒரு கோடி சொத்து மதிப்பு கொண்ட ஒரு நபர், தனது மகனோ அல்லது மகளின் கல்யாணத்தை சுமார் 10 லட்சம் செலவு செய்து நடத்துகிறார். 

அப்படி பார்த்தால் கடந்த 2023ம் ஆண்டு நிலவரப்படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 7.65 லட்சம் கோடி. தனது மகனின் திருமணத்திற்கு அவர் செலவு செய்தது அதில் 0.5 சதவிகிதம் கூட இல்லாத 5500 கோடி. இப்பொது சொல்லுங்கள், ஆனந்த் அம்பானியின் கல்யாணம், எளிமையாக நடந்த கல்யாணம் தானே?.

இன்னைக்கு ஒரு புடி.. பிரபல ஹோட்டல் உணவை ருசி பார்த்த ரஜினிகாந்த்.. அம்பானி திருமணத்தில் இதை பார்த்தீங்களா!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios