இடுப்பில் கை வைத்து "மாஸ் லுக்" விடும் அமித்ஷா..! நடுங்கி ஒடுங்கி "கப்சிப்" - ஆன எதிர்க்கட்சிகள்..!  

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று மீண்டும் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது பாஜக 

இதற்கெல்லாம் சரியாக ஸ்கெட்ச் போட்டு செயல்படுபவர் அமித்ஷா என விமர்சனங்கள்  எப்போதும் உண்டு. அதற்கு பின் உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்ற பிறகு மாபெரும் அதிரடி முடிவுகளை எடுத்து அதை அசால்ட்டாக நாடாளுன்றத்தின் இரண்டு அவைகளிலும் பாஸ் செய்து அமல்படுத்தி வருகிறார் அமித்ஷா. 

அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியின் அதிரடி முடிவுகள் உலக நாடுகளையே திரும்பிப்பார்க்க வைக்கின்றது என்று சொல்லலாம். அதில் குறிப்பாக பல நூற்றாண்டு காலமாக நிலுவையிலிருந்த மதம் தொடர்பான பிரச்சினைக்கு கூட தீர்வு கிடைத்த ஆட்சி என்றால் அது பாஜக ஆட்சி தான். 

அந்த வகையில் முத்தலாக் சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது,புதிய குடியுரிமை சட்டம் என அடுத்தடுத்து பல்வேறு திட்டங்களை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பாஸ் செய்து அமல்படுத்தி வருகிறார் அமித்ஷா. முடிவு கிடைக்காத பல  விஷயங்களுக்கு முடிவு கட்டுவதே பாஜவின் சாதனையாக உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் புதிய குடியிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட போது பாராளுமன்றத்தில் அமலில் ஈடுபட்ட எதிர்கட்சியினரை சும்மா ஸ்டைலாக  இடுப்பில் கை வைத்து ஒரு மாஸ் லுக் விட்டு இருக்கார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு கிளிக் தான் தற்போது சமூகவலைத்தளத்தில் பாஜக  தொண்டர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.