மீண்டும் ஆட்குறைப்பா? இந்த முறை எத்தனை பேர் தெரியுமா? அமேசானின் நடவடிக்கையால் அதிர்ந்து போன ஊழியர்கள்!!
அமேசான் நிறுவனம் தனது ஊழியர்கள் சுமார் 9 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமேசான் நிறுவனம் தனது ஊழியர்கள் சுமார் 9 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டது. பொருளாதார மந்த நிலையை சமாளிக்க பெரும் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை கையிலெடுத்துள்ளனர். அந்த வகையில் கூகுல், டிவிட்டர், மெட்டா, பேஸ்புக், அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் பலரையும் பணி நீக்கம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: Silver: வெள்ளி பாத்திரங்களில் இவ்வளவு நன்மைகளா! காசு இருக்கப்போ வாங்கி வெச்சிக்கோங்க..
இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக அமேசான் தனது ஊழியர்கள் பலரை சமீபத்தில் பணி நீக்கம் செய்திருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பணி நீக்கம் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நேற்று மட்டும் சுமார் 9,000 பேரை அமேசான் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
இதையும் படிங்க: குட்டிஸ்கள் எதனால் விரல் சூப்புகிறார்கள் ? அதன் பின்னணி தெரியுமா? வாங்க பார்க்கலாம்!
AWS, Amazon People experience மற்றும் Technology, விளம்பரம் மற்றும் வீடியோ கேமர்களுக்கான லைவ் ஸ்ட்ரீமிங் தளமான Twitch ஆகிய துறைகளில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அமேசான் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமேசான் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்திருப்பது ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.