Asianet News TamilAsianet News Tamil

வெறும் 10 நிமிடங்கள் புல்வெளியில் வெறுங்காலில்  நடப்பதால் இத்தனை நன்மைகளா? 

Walking Benefits : தினமும் காலையில் வெறுங்காலுடன் புல்வெளியில் நடப்பதால் கிடைக்கும் அளவில்லா நன்மைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

amazing benefits of walking on grass barefoot every morning in tamil mks
Author
First Published Sep 3, 2024, 7:30 AM IST | Last Updated Sep 3, 2024, 7:30 AM IST

தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதய ஆரோக்கியத்திற்கு தினமும் நடப்பது அவசியமான ஒன்று. நாம் நடக்கும்போது மன அழுத்தம் குறைந்து இலகுவாக உணர்வோம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் காலடிகள் நடப்பது நல்லது. 

பொதுவாக நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது நாம் செல்லும் வழித்தடம் கவனிக்கப்படத்தக்கது. சிமெண்ட் தரையில் அல்லது தார் சாலையில் வெறும் காலுடன் நடக்கக்கூடாது.  கடினமான இடங்களில் நடக்கும் போது கட்டாயம் ஷூ அணிய வேண்டும். ஆனால் தினமும் காலையில் புல்வெளியில் வெறும் காலுடன் நடந்தால் பல நன்மைகள் கிடைக்கும். 

தினமும் காலையில் புல்வெளியில் வெறும் காலுடன் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் : 

நல்ல தூக்கம் 

நமது உடலில் உள்ள பல உடல் நல பிரச்சனைகளுக்கு தூக்கமின்மை தான் காரணம். சரியாக தூங்காமல் இருப்பதால் உடல் எடை அதிகரிப்பு, மன அழுத்தம், வேலையில் சுறுசுறுப்பின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும். தொடர்ச்சியாக தூங்காமல் இருப்பவர்களுக்கு பலவிதமான நோய்களும் ஏற்படும். தூக்கமின்மை பிரச்சனையை தவிர்க்க தினமும் புல்வெளியில் நடப்பது நல்ல பலனளிக்கும்.  இதனால் இரவில் நல்ல தூக்கம் வரும்.   
 
மாதவிடாய் வலி நிவாரணம் 

எல்லாப் பெண்களும் மாதவிடாய் நேரத்தில் சிரமப்படுவதில்லை. ஆனால் பல பெண்கள் வலியால் துடிக்கின்றனர். மனநிலையில் மாற்றங்கள், வயிறு வலி, தலைவலி, கை கால்கள் வலி என உடல் முழுக்க வலியால் அவதிபடுவார்கள். மாதவிடாய் சமயத்தில் வெறுங்காலுடன் புல்வெளியில் சிறிது நேரம் நடந்தால் வலி குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க:  தினமும் காலை வாக்கிங் போறீங்களா? இந்த தவறை செய்யாதீங்க.. இல்லையெனில் முழங்கால் டேமேஜ் ஆகலாம்!

ஹார்மோன் பிரச்சனைகள்

பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு ஆணிவேர். ஹார்மோன்கள் உடலை பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. அவை சீராக இயங்க தினமும் காலை 10 நிமிடம் புல் மீது வெறுங்காலுடன் நடக்கலாம். தொடர்ச்சியான உடற்செயல்பாடு ஹார்மோன் சமநிலையின்மையில் இருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்க செய்யும் என  நிபுணர்கள் கூறுகின்றனர். 

கண்கள் ஆரோக்கியம்

செல்போன், கணினி போன்றவற்றின் திரையில் இருந்து வெளியேறும் வெளிச்சத்தை அதிகம் காண்பதால் கண்களின் அழுத்தம் அதிகரிக்கிறது. தினமும் புல் மீது வெறுங்காலுடன் நடப்பது பாதங்களில் உள்ள அழுத்தப் புள்ளியை செயல்படுத்துகிறது. இது நமது பார்வை நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளதால், கண்களின் அழுத்தத்தை விடுவிக்கப்படுகிறது. இது பார்வையை மேம்படுத்தும்.

ரத்த ஓட்டம் மேம்படும்

உடலில் ஏதேனும் காயங்கள் இருப்பவர்கள் கடுமையான வலியால் அவதிப்படுபவர்கள் புல்வெளியில் சிறிது நேரம் நடப்பது நல்லது. வெறும் காலுடன் புல்வெளியில் நடப்பது உடலுக்கு மசாஜ் செய்வது போல இருக்கும். ரத்த ஓட்டம் மேம்படும். இந்த உடல் செயல்பாடு உடலில் காணப்படும் வலி, வீக்கத்தை குறைக்கிறது. 

இதையும் படிங்க:  Health Benefits of Walking: அடேங்கப்பா.. நடைபயிற்சி சென்றால் இதயத்திற்கு இவ்வளவு நன்மைகளா?

ரத்தம் அழுத்தம்

பல மருந்துகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என மக்கள் பயன்படுத்துகிறார்கள். நிறைய உணவுகளை தவிர்க்கின்றனர். அந்த வகையில் புல்வெளியில் புல்லின் மீது வெறுங்காலுடன் நடப்பதும் நல்ல பலனளிக்கும். இது மன அழுத்தத்தை குறைப்பதால், படிப்படியாக இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வர உதவுகிறது. 

நோய் எதிர்ப்பு சக்தி 

ஒரு ஆரோக்கியமான நபருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காணப்படும்.  தினமும் காலையில் நீங்கள் வெறுங்காலுடன் புல்லில் நடப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. புல்வெளியில் நடக்கும் பழக்கம் உங்களுடைய நரம்பு மண்டலத்தின் தூண்டுதலை மேம்படுத்தும். இதனால் உடல் ரீதியான பிரச்சனை எதிர்த்துப் போராடும் வலிமை பெருகும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios