தினமும் காலை வாக்கிங் போறீங்களா? இந்த தவறை செய்யாதீங்க.. இல்லையெனில் முழங்கால் டேமேஜ் ஆகலாம்!
Walking Damage Your Knees : காலையில் நடைப்பயிற்சி செய்யும் போது என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
நடைப்பயிற்சி என்பது மிகவும் எளிமையான மற்றும் பயனுள்ள உடற்பயிற்சி ஆகும். எனவே, இதை பலரும் செய்கிறார்கள். நடைப்பயிற்சி முழங்கால்களை வலுப்படுத்தும் நெகிழ்வு தன்மையை அதிகரிக்கும் மற்றும் எடையை கட்டுப்படுத்தும்.
ஆனால் உங்கள் முழங்காலில் வலி அல்லது காயம் ஏற்பட்டால் நடைபயிற்சி செய்வதற்கு முன் நீங்கள் சற்று சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். நடைப்பயிற்சி உங்களுக்கு பல நன்மைகளை வழங்கினாலும், தவறான வழியில் நடப்பதன் மூலம் உங்கள் உள்ளம் கால்களை நீங்கள் காயப்படுத்தலாம். எனவே, நடக்கும் போது என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்பதை குறித்து இன்றைய கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: Health Benefits of Walking: அடேங்கப்பா.. நடைபயிற்சி சென்றால் இதயத்திற்கு இவ்வளவு நன்மைகளா?
நடைப்பயிற்சி செய்யும் போது இவற்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்:
1. வார்ம்-அப் அவசியம்:
நீங்கள் காலையில் நடைப்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் முன் உடலை தயார்படுத்துவது மிகவும் முக்கியம். இதற்கு நீங்கள் ஸ்ட்ரெச்சிங், வார்ம்-அப் செய்வது மிகவும் முக்கியம். நீங்கள் மெதுவாக நடக்க தொடங்கும் போது, உங்கள் தசைகள், மூட்டுகள் வெப்பமடையும், நீட்சி தசைகளின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும் மற்றும் முழங்கால்களில் அழுத்தம் குறைக்கும். மேலும், தசைகள் குளிர்ச்சியடையும், தசை சோர்வு குறையும் வகையில் நடைபெறச்சி செய்த பிறகு நீட்சி செய்தால் முழங்கால்களில் தேவையற்ற அழுத்தத்தை உண்டாக்காது.
2. நல்ல காலணிகள்:
நீங்கள் நடைபயிற்சி செய்தால் நீங்கள் காலில் அணிந்திருக்கும் ஷுவின் தரம் மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். லேசான மற்றும் சரியான குஷன் கொண்ட சூக்கலை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் கால்களுக்கு நன்மை கிடைக்கும். ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் ஷூ உங்களுக்கு சரியாக இல்லை என்றாலோ அல்லது ரொம்பவே இறுக்கமாக இருந்தாலோ பாதங்களில் கொப்புளங்கள் வரும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: வெறும் நடையை வைத்தே உங்க மொத்த ஜாதகத்தையும் கண்டுபிடிக்கலாம் தெரியுமா? இந்தமாதிரி நடக்குறவங்ககிட்ட பணம் சேரும்
3. முழங்காலில் வலி:
உங்கள் முழங்காலில் ஏற்கனவே வலி இருந்தால், ஒரே நேரத்தில் 10 கிலோமீட்டர் நடக்க வேண்டாம். மெதுவாக ஆரம்பித்து பிறகு, தூரத்தை அதிகரிக்கவும். முக்கியமாக முழங்கால்களை சுற்றியுள்ள தசைகளை வழிபடுத்த மலைகள் மற்றும் படிக்கட்டுகளில் ஏறுவது மிகவும் நன்மை பயக்கும்.
4. எடை மேலாண்மை:
உங்களது எடை அதிகரிக்க அதிகரிக்க அதனது மிகப்பெரிய தாக்கம் உங்களது முழங்காலில் தான் விழும் உடல் எடையை குறைப்பதற்கு முன் உங்கள் உணவை மாற்றுவதன் மூலம் சில கிலோக்களை நீங்கள் சுலபமாக குறைக்க உதவும். இது உங்கள் உடலை நடை பயிற்சிக்கு தயார்படுத்தும். மேலும், நடைப்பயிற்சியின் போது உடல் எடையும் சுலபமாக குறைக்க முடியும்.
5. மருத்துவரை அணுகுவது அவசியம்:
உங்கள் முழங்காலில் வலி அல்லது ஏதேனும் பிரச்சனை இருந்தால் உடனே மருத்துவர் அணுகுவது மிகவும் நல்லது. மருத்துவரின் ஆலோசனை இன்றி நீங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டாம்.
6. உடலை நீரேற்றமாக வைத்திருங்கள்:
நடக்கும் போது உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம் தண்ணீர் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது மற்றும் தசை சோர்வை குறைக்கும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்கள் முழங்கால்களுக்கு நன்மை பயக்கும்.
தினமும் காலை நடைபெற்ற செல்வது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும் ஆனால் அதற்கு முன் நீங்கள் உங்கள் முலம் கால்களை கவனித்துக் கொள்வது மிகவும் அவசியம் மேலே சொன்ன குறிப்புகளை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் உங்கள் எடையை சுலபமாக குறைக்கலாம்.