ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்ல வெறும் ரூ.1399 இல் அதிரடி சலுகையை அறிவித்து உள்ளது ஏர் ஏசியா நிறுவனம். 

இந்த அற்புத திட்டத்தின் மூலம், 120 நாடுகளுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பயணிகளின்  வருகையை அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு நாடுகளுக்கு செல்லக் கூடிய அற்புத வாய்ப்பை தந்துள்ளது ஏர் ஏசியா நிறுவனம்.

எப்போது பயணம் செய்ய முடியும்.?
  
வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 26, 2019  வரையில் பயணம் செய்யலாம். 
அதில் குறிப்பாக ரூ.999 இல் உள்ளூர் பயணம் மேற்கொள்ளலாம். இதே போன்று ரூ.1399 இல் வெளிநாடுகளுக்கு செல்லலாம். இதை விட குறைந்த விலையில் ஒருவர் வெளிநாடு செல்ல முடியுமா என்பது கேள்விகுறி. 

ஏர் ஏசியா நிறுவனத்தின், ஏர் ஏசியா இந்தியா, ஏர் ஏசியா பெர்காத், தாய் ஏர் ஏசியா, ஏர் ஏசியா எக்ஸ் உள்ளிட்ட குறிப்பிட்ட விமானத்தில் மட்டுமே செல்ல முடியும் என்பது குறிபிடத்தக்கது. 

இதே போன்று உள்நாட்டு பயணம் மேற்கொள்ளும் போது, பெங்களூரு, கொல்கொத்தா, விசாகப் பட்டினம், சென்னை, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட 21 முக்கிய நகரங்களுக்கு இந்த கால கட்டத்தில் குறைந்த  கட்டணத்தில் இப்போதே பதிவு செய்து வைத்துவிட்டு பயணிக்கலாம். 

இதே போன்று குறிப்பிட்ட சில நாடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் சிறப்பு சலுகை பெற முடியும். அந்த வகையில், சிட்னி, ஆக்லாந்து, மெல்போர்ன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.