again rain will start in south

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

குமரி கடல், மாலத் தீவு மற்றும் கச்சாதீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி காணப்படுபதால்,பலத்த காற்றுடன் கூடிய மழை பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது

தெற்கு மற்றும் தென் மேற்கு பகுதியில் காற்று வேகமாக வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது

காற்றின் வேகம்

மணிக்கு 30 முதல் அதிகபட்சமாக 45 கிலோ மீட்டர் வரையில் காற்று வேகமாக வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கோடை வேளையில், வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகதின் தென் மாவட்டங்களில் நல்ல மழை அவ்வப்போது பெய்து வருவதால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.