பாலுறவுக்கு முன் ஆயத்தமாவதைப் போல அதற்குப் பின்னும் சிலவற்றை கட்டாயம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. செக்ஸ்க்கு பிறகு உடனே படுக்கையில் இருந்து எழுந்து குளியல் போட அவசியம் இல்லை. ஆனால் கழுவுவது, சிறுநீர் பாதை தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் வெது வெதுப்பான நீரில் பிறப்புறுப்புகளை சுற்றி கழுவவேண்டும். பாதுகாப்பான சோப்புகளை பயன்படுத்தினாலும் மென்மையான சருமமாக அல்லது ஏற்கனவே தொற்று இருந்தால், சோப்பு எரிச்சலை உண்டாக்கலாம்.

ஆண்கள் குறியை மெதுவாக இழுத்து தோலின் அடியில்கழுவ வேண்டும். தண்ணீரை பீச்சி அடிக்க வேண்டாம். சில பெண்கள் பாலுறவுக்குப் பின் யோனியின் உள்ளே சுத்தம் செய்ய நினைப்பதுண்டு. இது உங்கள் யோனியை பாதுகாக்கும் பாக்டீரியாக்களின் இயற்கை சமநிலை பதிக்கக்கூடும் என்பதால் அதனைத் தவிர்க்கலாம் - அது தன்னை இயல்பாகவே சுத்தம் செய்துகொள்ளும். பிறப்புறுப்பில் லேசான வாசனை என்பது சாதாரணமானது. அது ஒரு பிரச்சனைக்கு அடையாளமாக இருக்க வாய்ப்பில்லை. 

தனிப்பட்ட பகுதிகளில் புத்துணர்ச்சி என்ற விளம்பரத்துடன் விற்கப்படும் கிரீம்கள், ஸ்ப்ரேகளில் கடுமையான சோப்புகள், சவர்க்காரம், ஷாம்பு, வாசனை திரவியங்கள், லோஷன்க உள்ளிட்டவை உள்ளன. இவை பாதிப்புகளை உண்டாக்கலாம். செக்ஸ்க்கு பிறகு மிதமான சூடுள்ள தண்ணீர் கொண்டு மென்மையான துடைத்து விடுங்கள் அதுவே போதுமானது. 

பாலுறவின் போது பாக்டீரியாக்கள் சிறுநீர் பை, சிறுநீர் குழாய் பாகங்களில் தொற்றுநோய் வாய்ப்புகளை உண்டாக்கலாம். சிறுநீர் கழிக்கும் போது, அந்த கிருமிகளை வெளியேற்ற முடியும் என்பதால் துணையுடன் கூடி குலவும்போது சிறுநீர் கழிப்பது நல்லது. சிறுநீர் கழிப்பதோடு, தண்ணீர் குடிக்கவும் மறக்க வேண்டாம். தண்ணீர் குடிக்கும்போது, இன்னும் அதிகமாக சிறுநீர் கழிக்க தூண்டப்பட்டு, தொற்றுநோய் பாதிக்கும் முன்னரே உடலில் இருந்து பாக்டீரியாவை வெளியேற்றி விடலாம். 

சூடான, வியர்வை உள்ள இடங்களில் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் நன்கு செழித்து வளரும். எனவே காற்றோட்டமுள்ள தளர்வான உள்ளாடைகள், ஆடைகளை அணியவேண்டும். பருத்தி உள்ளாடைகளை, காற்றோட்டத்தை கொடுப்பதுடன் ஈரப்பதத்ஹ்தை உறிஞ்சுகின்றன. படுக்கைக்குச் செல்லும் போது உள்ளாடைகளை தவிர்ப்பதும் நல்லது.

துணையின் பிறப்புறுப்பைத் தொடுவதன் மூலம் ஏற்படும் பாக்டீரியாவை அகற்ற சொப் மூலம் கைகளை கழுவலாம். இதை பாலுறவுக்குப் பின் சுத்தப்படுத்தலுக்கான வழக்கமான செயலாக செய்யலாம். பாலியல் உபகரணங்களை உபயோகித்த பின் அவற்றில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை உள்ளிட்டவை வளரலாம் என்பதால் ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் சுத்தம் செய்தல் கட்டாயம் மற்றவர்களுடன் உபகரணங்களை பகிர்ந்து கொள்வது நல்லது அல்ல