திருச்சியில் ஆடி பெருக்கு விழா உற்சாகம்

ஆடி பெருக்கை ஒட்டி இன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது

இன்றைய தினத்தில் ஆற்றங்கரையில் மக்கள் திரளாக திரண்டு இன்று காலை  முதலே கடவுகளை வழிபட்டு வருகின்றனர்.

புதுமண தம்பதிகள், முதல் குடும்பத்துடன் காவேரி ஆற்றங்கரைக்கு சென்று  வெள்ளப்பெருக்கை பார்த்த  வண்ணம் தண்ணீரை வணங்கி வருகின்றனர்

தாலிப்பொட்டு வைத்தும், தான் உடுத்திய மாலை, பட்டு ஆடை, பூ பழம் என  அனைத்தும் ஒரு தட்டில் வைத்து, கடவுளை வணங்கி பின்னர் ஆடையை ஆற்றிலே  விட்டு  தரிசனம்  செய்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம், திருச்சி மாவட்டத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஆறுகளில் தண்ணீர் செல்வதால் பெண்கள் தங்கள் குடும்பத்துடன் உற்சாகத்துடன் ஆடி பெருக்கு விழாவை கொண்டாடி வருகின்றனர்.

ஐதாண்டுகளுக்கு பிறகு காவேரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் மக்கள்  பெரும் மகிச்சி தெரிவித்ததுடன், இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் செல்வ செழிப்பாக ஆற்றில்  தண்ணீர் செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்து உள்ளனர்.