அடுத்தடுத்து குவியும் அதிகாரிகள் .! திணறும் விஜய் வீடு..! 

நடிகர் விஜய், ஏஜிஎஸ் சினிமாஸ், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோரது வீடு மற்றும் அலுவலகங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். பிகில் பட வருமான விவகாரத்தில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகம் என 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

அதனை தொடர்ந்து நடிகர் விஜய்க்கு சொந்தமான சாலிகிராமம், நீலாங்கரை, பனையூர் வீடுகளில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று இரவு முதல் நடிகர் விஜய்யிடம் ஐ.டி. அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த பிகில் திரைப்படம் 300 கோடி வசூல் செய்ததாக அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டிருந்தார்.

அந்த தகவலை அடிப்படையாக வைத்தே வருமான வரித்துறையினர் ஏஜிஎஸ் சினிமாஸ், பிகில் பட பைனான்சியர் அன்புச்செழியன், நடிகர் விஜய் ஆகியோரை சுற்றி வளைத்து உள்ளனர். 

மேலும் பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் பண்ணை வீட்டில் வைத்து அவரிடமும், அவரது மனைவி சங்கீதாவிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். 16 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நீடித்து வரும் நிலையில் விஜய் மனைவி சங்கீதாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் விஜய்க்கு சொந்தமான மேலும் பட இடங்களிலும் வருமான வரி சோதனை  நடத்த அதிகாரிகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளதால் சமாளிக்க முடியாமல் விஜய் வீடே திணறுகிறது.