எனக்கு கொரோனா உள்ளது..! கல்லூரி மாணவியின் நாடகத்தால் நேர்ந்த விபரீதம்..! 

சென்னையிலிருந்து தனியார் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவி ஒருவர் பின்னால் வந்த தோழியின் காரில் செல்வதற்காக தனக்கு கொரோனா உள்ளது என பொய் சொல்லி அவசரமாக பேருந்திலிருந்து இறங்கிய சம்பவம் சக பயணிகளிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

வெள்ளிக்கிழமையன்று தனியார் ஆம்னி பேருந்தில் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் சென்றுள்ளார் ஐஐடி கல்லூரி மாணவி ஒருவர். மேல்மருவத்தூர் அருகே பேருந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென தனக்கு கொரோனா உள்ளது என கூறி தான் இறங்க வேண்டும்... வண்டியை நிறுத்துங்கள் என டிரைவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார்.

பின்னர் தனக்கு கொரோனா உள்ளது என கூறி பேருந்தில் இருந்து அவசரமாக இறங்கியுள்ளார். இதன்பின்னர் சக பயணிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். பின்னர் காவல் நிலையத்திற்கும் சுகாதாரத்துறையினருக்கும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த சுகாதாரத்துறையினர் பேருந்தில் பயணம் செய்த அனைவருக்கும் கிருமி நாசினி மருந்துகளை கொடுத்து அவர்களை சமாதானம் செய்துள்ளனர். பின்னர் அந்த தொலைபேசி எண்ணை கொண்டு விசாரணை செய்ததில் அப்பெண் சென்னை ஐஐடி கல்லூரியில் படிக்கும் மாணவி சுஜிதா என்பதும், பேருந்தின் பின்னால் வந்த சக தோழிகள் காரில் வந்ததால் அவர்கள் தொலைபேசியில் அழைக்கவே, அதே இடத்தில் இறங்க முயற்சி செய்துள்ளார் சுஜிதா.

ஒரு கட்டத்தில் டிரைவர் இங்கே நிறுத்த முடியாது என சொல்லவே தனக்கு கொரோனா உள்ளது என பொய் சொல்லி நாடகமாடி இறங்கிச் சென்றுள்ளார். பின்னர் மாணவியின் இந்த செயலை கண்டித்து போலீசார் எச்சரித்து அனுப்பி உள்ளனர்.