A person who counts premature death

பல பறவைகள் இருந்தாலும் , நம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்த தினமும் நம் கண்களில் அகப்படும் ஒரு பறவையென்றால் அது காகம் தான். அதுமட்டுமில்லாமல் வீட்டில் படையல் போடும் போது, முதலில் காகத்திற்கு தான் முதலில் படையல் உணவை நம் முன்னோர்கள் வழங்கி வந்தனர்.

இதெல்லாம் ஓகே. காகம் எப்படி ஒருவர் அகால மரணம் அடைவதை முன்கூட்டியே வெளிப்படுத்தும் என கேள்வி கேட்கீறிர்களா? ஆம் காகம் வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் என்ன சகுனத்தை குறிக்கிறது என்பதை பார்க்கலாம்

1.வாகனம், குடை, காலணி, உடல் மீது காகம் தீண்டுதல் - அகால மரணம்

2. நாம் செல்லும் திசை நோக்கி காகம் கரைந்து கொண்டே வந்தால்- பயணம் தவிர்ப்பது நல்லது

3. ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவளிக்கும் காட்சி - இனிதான செயலை குறிக்கும்

4.தென்கிழக்கு திசை நோக்கி கரைந்தால் – தங்கம் லாபம் கிடைக்கும்.

 5.தென்மேற்கு திசை நோக்கி கரைந்தால் – தயிர், எண்ணெய், உணவு லாபம் கிடைக்கும்.

6. மேற்கு திசை நோக்கி கரைந்தால் –நெல், முத்து, பவளம் மூலம் அதிக லாபம் கிடைக்கும்

7. வடக்கு திசை நோக்கி கரைந்தால் – ஆடைகள், வாகனங்கள் வந்து சேரும்

8.உங்கள் எதிரே காகம் வலப்பக்கம் இருந்து இடப்பக்கம் சென்றால்- தன லாபம் கிட்டும்.

9.இடப்பக்கம் இருந்து வடப்பக்கம் சென்றால் - தன நஷ்டம் உண்டாகும்.

எனவே காகம் உங்கள் அருகாமையில் இது போன்று கரைந்து கொண்டிருந்தால், ஒரு சில சகுனங்களை முன்கூட்டியே நாம் தெரிந்துக் கொள்ளலாம்