தயவு செய்து யாரும் சொந்த ஊருக்கு போகாதீங்க...! விவரமறிந்தவரின் "கதறல்"..! 

கொரோனா பாதிப்பு குறித்து தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளங்களிலும் எவ்வளவு தான் விழுப்புணர்வு ஏற்படுத்தினாலும், மக்கள் வெளியில் நடமாடிக்கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.    

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெரும் துயரத்தில் இருந்து மீண்ட சீனா மற்றும் தற்போது   படு மோசமாக இருக்கக்கூடிய இத்தாலி, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்த ஒருவர், இந்தியாவில் அப்படி ஒரு நிலைமையை வரமால் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு  கருத்தை பதிவு செய்து உள்ளார். அதில்,                            

"நீங்க எங்க இருக்கீங்களோ அங்கேயே உங்களை தனிமைபடுத்தி கொள்ள முயலுங்கள்...

நகரங்களிலாவது கொரோனாவுக்கு என தனி ஏற்பாடுகள் மருத்துவமனைகளில் உள்ளன...

இத்தாலியில் இப்படி சொந்த ஊருக்கு இடம் பெயர்ந்த வெறும் 10000 நபர்களால் தான் இன்று தினசரி 1000 இறப்புகள் தொடர்கதையாக உள்ளதாக தகவல்கள் வருகின்றன... 

கிராமங்களுக்கு போய் உங்களால் மற்றவருக்கும் உங்கள் வளர்ப்பு பிராணிகளுக்கும் தொற்று ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படலாம்...

உங்களுக்கு #கொரோன பாதித்த எந்த வித அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அது உடனே தெரியாது... 

பல நாட்கள் ஆகலாம் ஏன் சிலருக்கு அறிகுறிகள் வெளிபடாமலேயே தானே கூட குணமாகலாம்...

ஒத்துழையுங்கள் அரசுக்கு... உணவுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுங்கள்... தயவு செய்து பிரயானங்களை தவிருங்கள்..." நன்றி என குறிப்பிட்டு உள்ளார்.