"மோடி ஜி".. உங்களையும் சற்று கவனித்துக்கொள்ளுங்கள்..! எங்களுக்கு நீங்கள் தேவை..! பிரதமருக்கு மெசேஜ்  தட்டிய சிறுவன்!

"மோடி ஜி உங்களையும் சற்று கவனித்துக்கொள்ளுங்கள்"...எங்களுக்கு  நீங்கள் வேண்டும் என மிகவும் பொறுப்பாகவும், ஆசையாகவும்  ஒரு சிறுவன் போர்டில் எழுதி வெளிப்படுத்துவது போல் எடுக்கப்பட்ட  புகைப்படம் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இதற்கு என்ன அப்படி ஒரு காரணம் தெரியுமா..? நாம் அனைவருமே...நம்மை பற்றி மட்டுமே கவலைப்பட்டு கொண்டிருக்கிறோம். ஆனால் எந்த பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பு மக்களையும் தாக்கி வருகிறது கொரோனா ..

குறிப்பாக இந்தியாவில் கொரோனா பரவுதலை தடுக்க பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். கொரோனா பாதிப்பு குறிந்து அறிந்தவர்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடிந்த்து. ஆனால் நாட்டில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல், மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலை செய்து வரும் கூலி  தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தற்போது அவரவர் சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடும் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஒரு நிலையில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் பிரதமர் மோடி.. அப்போது, "என்னை மன்னித்து விடுங்கள்.. இதை தவிர வேறு வழி இல்லை.. ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் என் மீது உங்களுக்கு கோபம் இருக்கும் என   தெரிவித்து இருந்தார்.

ஆக மொத்தத்தில், மக்கள் யாரும் பாதிக்கக்கூடாது என்பதற்காகத்தான் நாட்டு பிரதமர் இப்படி அதிரடி  முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ளுதல் வேண்டும் ... அதுமட்டுமல்லாமல் மக்கள் மட்டுமே கஷ்டப்படுவதாகவும்... மற்ற சேவையில் இருப்பவர்கள்  ஜாலியாக இருப்பதாகவும் பொருள்படாது 

மக்களை கொரோனா தாக்கி விட கூடாது என்பதற்காக மருத்துவர்கள்,செவிலியர்கள், மாநகராட்சி ஊழியர்கள், ராணுவத்தினர் அரசியல் தலைவர்கள் என அனைவரும் பெரிதும் போராடி வருகின்றனர். இதற்கு மக்கள்  ஒத்துழைப்பு மட்டும் கொடுத்தால் போதும் என்ற நிலை உள்ளது.

இப்படி ஒரு நிலையில் மிக முக்கிய முடிவு எடுத்து நாட்டு மக்கள் நலனுக்காக போராடி வரும் மோடி  அவர்களும் தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என யார் நினைக்கின்றனர். அப்படி  நினைக்கும் பலரில் யாரும் வெளிப்படுத்துவதும் இல்லை. ஆனால் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில்.. ஆங்கிலத்தில் pm ji you too take care. we need you இவ்வாறு குறிப்பிட்டு ஒரு சிறுவன் வெளிப்படுத்தியுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது . மக்களும் அதற்கு ஆதரவு தெரிவித்து மோடி அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என வாழ்த்துகின்றனர்.