ஊதி காட்டினா உசுரு போய்விடும்.. கொரோனாவால்...  குடிமகன்களுக்கு ஒரே குஷி..!  

எவ்வளவு துயரமான செய்தியாக இருந்தாலும் சரி, எவ்வளவு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் சரி... நம்ம மக்கள் விரும்பி மது அருந்துவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அது உடல் நலத்திற்கு கேடு என தெரிந்தாலும், விற்பனையிலும் செம மாஸ் காட்டுவது நம்ம அரசுதான்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்... தற்போது இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒரு சில மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதாவது காரணம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து நேரடியாக மற்றவர்களுக்கு தொற்றுகிறது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தொடர்ந்து கைகழுவி இருத்தல் வேண்டும், தூய்மையை பேணுதல் வேண்டும், இருமும்போதும், தும்பும் போதும் கர்ஷிப்  பயன்படுத்துதல் வேண்டும் என பல சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த ஒரு ஒரு நிலையில் குடிமகன்களுக்கு எல்லாம் மகிழ்ச்சி கொடுக்கும் விதமாக, மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய, மூச்சு பரிசோதனை கருவியை நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து போலீசார் பயன்படுத்தி வருகின்றனர் அல்லவா?

தற்போது கொரோனோ பீதி கிளம்பி உள்ள நிலையில் மூச்சு பரிசோதனை கருவி மூலமாகவும் இந்நோய் பலருக்கு பரவும் வாய்ப்புள்ளதாக டெல்லி பாஜ தலைவர் தஜிந்தர்பால் சிங் பக்கா எச்சரித்துள்ளார்.

கொரோனா முக்கிய தகவல்..! "பள்ளிகளுக்கு அவசர அறிவிப்பு"..!

இது தொடர்பாக அவர் டெல்லி போலீஸ் கமிஷனருக்கு எழுதிய கடிதத்தில், ‘முறையாக பயன்படுத்தப்படாத மூச்சு பரிசோதனை கருவி மூலமாக கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்புள்ளது. எனவே, இக்கருவிக்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.இதனால் குடிமகன்களுக்கு பெரும் மகிழ்ச்சி தான் போங்க..!