போஸ்ட் ஆபிசில் உள்ள "சூப்பர் திட்டம்"....! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க...!

லெட்டர் வாங்கவும், ஸ்டாம்ப் வாங்கவும், டெலிகிராம் அனுப்பவும் நம் தபால்  நிலையத்திற்கு சென்று வந்துக்கொண்டிருந்தோம்..

ஆனால் தற்போது இமெயில்,ஸ்மார்ட்போன்,கொரியர் என வந்துவிட்டதால்,  அஞ்சலகத்தின் தேவை மக்களுக்கு சற்று குறைந்து விட்டது என்றே கூறாலாம்..

அதே வேளையில், தம்மிடம் இருக்கும் அனைத்து பணமும் வங்கி மூலமாக தான்  பரிமாற்றம் செய்து வருகிறோம் அல்லவா...

எப்படி வங்கியின் மூலம் பரிமாற்றம் செய்து பயன்படுத்தி வருகிறோமோ..அதை போன்றே அஞ்சலகங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இனி வரும் அடுத்தடுத்த பதிவுகளில் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

போஸ்ட் ஆபிஸில் சேவிங்ஸ் அக்கௌன்ட்..!

(post office savings account)

இந்தியாவிலேயே வெறும் 20 ரூபாய்க்கு ஒரு சேமிப்பு கணக்கு தொடங்க முடியும் என்றால், அது தபால் அலுவலகத்தில் மட்டும் தான் சாத்தியம்

நம் வீட்டு குழந்தைகளிடம் செமிக்கும் பழக்கத்தை உருவாக்க இந்த சேமிப்பு கணக்கு உதவும்.

குறைந்த பட்ச ரூ. 50 மட்டுமே...

(காசோலை வசதி தேவையென்றால், குறைந்தபட்சாம் இருப்புத்தொகை ரூ.500 மட்டுமே ..

இந்த சேமிப்பு கணக்கில் சேமிக்கப்படும் தொகைக்கு ஆண்டு தோறும் 4 சதவீத வட்டி  வழங்கப் படும்.

இந்த வட்டி தொகைக்கு ரூ.10,000 வரை வருமான வரி விலக்கு உண்டு.பணத்தை எடுப்பதற்கு ஏடிஎம் வசதியும் உண்டு.