முகத்தில் முடி வந்து விடக்கூடாது என பெண்கள் மஞ்சள், க்ரீம்கள் சகிதம் முகப்பொலிவில் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஒரு பெண் ஆண்களைப் போலவே மீசை வளர்த்து கம்பீரமாக உலா வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
முகத்தில் முடி வந்து விடக்கூடாது என பெண்கள் மஞ்சள், க்ரீம்கள் சகிதம் முகப்பொலிவில் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஒரு பெண் ஆண்களைப் போலவே மீசை வளர்த்து கம்பீரமாக உலா வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தன் மீசை குறித்து எத்தனையோ விமர்சனங்கள் வந்தும், மீசையை மழிக்க தனக்கு மனம் வரவில்லை என அந்தப் பெண் கூறியுள்ளார். நாம் அறிந்தவரை அழகுக்கு இலக்கணமாக ஆண்களைவிட பெண்களே முன் நிறுத்தப்படுகின்றனர், பல இலக்கியங்களில் பெண்கள் நிலவுக்கு ஒப்பிட்டு வர்ணிக்கப்படுகின்றனர். பெண்கள் முகம் அந்தளவுக்கு மாசு மரு அற்று பளிங்கு போல இருக்கும் என்பதன் ஒப்பனை தான் அது.
இந்த காலத்து பெண்களும் முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள, பலவிதமான கிரீம்கள், களிம்புகள், ரேஷர்களை பயன்படுத்தி முகத்தில் முடியை அகற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் அங்கு ஒரு பெண் ஆண்களைப்போலவே மீசை வைத்து, பெண்களுக்கு மீசையும் அழகுதான் என செய்து காட்டியுள்ளார். இதற்காக எத்தனையோ கேலி கிண்டல்கள், அவமானங்கள் வந்தபோதும் மீசையுடன் வலம் வருவதே தனக்கு மகிழ்ச்சி என்றும் அந்தப் பெண் கூறிவருகிறார்.

முழு விவரம் பின்வருமாறு:- கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷைஜூ (35) ஆண்களைப்போலவே மீசை வைத்து, அதை மேலும் வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். தனது செல்போன் மற்றும் சமூக வலைத்தளத்திலும் தனது மீசை புகைப்படத்தை டி.பி ஆக வைத்துள்ளார். எப்போதும் ஆண்கள் மட்டுமே மீசையை வைத்து அதை விதவிதமாக அலங்கரித்து கொள்வர் என்று பார்த்துக் பழகிப் போன மக்கள் ஒரு பெண் மீசையுடன் வலம் வருவதை வியப்புடன் பார்த்து வருகின்றனர். அதேவேளையில் பலர் இதற்காக அவரை கேலி கிண்டலும் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: அதிமுக பொதுக்குழு வழக்கு.. இந்த ஜட்ஜ் வேண்டாம்.. வேறு ஜட்ஜை கோரும் ஓபிஎஸ் தரப்பு.!
ஷைஜூவுக்கு மீசை எப்படி வந்தது ...
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஷைஜூவின் உதட்டிற்கு மேல் சில முடிகள் தென்பட ஆரம்பித்தன, அது அப்போது ஓரளவுக்கு தெரிந்தும் தெரியாமல் இருந்தது ஆனால் நாளடைவில் அது அடர்த்தியாக வளர தொடங்கியது, ஆனால் மற்றவர்களாக இருந்தால் உடனே மருத்துவரை அனுகி அதை நிறுத்த முயற்சித்திருப்பர் ஆனால் ஷைஜூ மற்றவர்களைப் போல் இல்லாமல் அதை வளர்க்க முடிவு செய்தார். மீசையை வளர்ப்பதன் மூலம் தனி அடையாளத்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அதை அனுமதிக்கவில்லை, ஆனால் தான் விரும்பிய வாழ்க்கையை வாழவேண்டும் என்ற முடிவில் தான் அதை செய்ததாக அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: கழிவறைக்கு போனாலும் மோடி அரசு கையேந்தும்.. வெட்கமில்லையா அண்ணாமலை.. டார் டாரா கிழிக்கும் ஆம் ஆத்மி.
எத்தனையோ கேலி கிண்டல்களுக்கு மத்தியிலும் இனி மீசையில்லாமல் வாழ்வதை தன்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என அவர் கூறி வருகிறார். கொரோனா தொற்றின் போது கூட முகக்கவசம் அணிய தான் விரும்பவில்லை என்றும், ஏனென்றால் அது தனது மீசையை மறைத்ததால் தான் வெறுப்படைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பலர் என் தோற்றத்தைப் பார்த்து கேலி கிண்டல் செய்கின்றனர், ஆனால் மீசையை நான் காதலிக்கிறேன், எனது குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக உள்ளனர், நான் மீசை வளர்ப்பதில் எனது கணவர் லட்சுமணனுக்கும், குடும்பத்தாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

இதுவரை எனது கணவர் எனது மீசை குறித்து எந்தவிதமான எதிர்மறையான கருத்தும் கூறியதில்லை, பலர் பல வகைகளில் கருத்து கூறுவார்கள் ஆனால் நான் அதைப் பொருட்படுத்துவதில்லை என ஷைஜூ கூறியுள்ளார். பெண்களுக்கு சில பகுதிகளில் சில இடங்களில் முடி அதிகமாக வளரும், அந்த வகையில் எனக்கு உதட்டுக்கு மேல் இந்த முடி வளர்ந்திருக்கிறது, யார் என்ன சொன்னால் என்ன? நான் யாருக்காகவும் மீசையை அகற்றப் போவதில்லை இவ்வாறு அவர் கூறியுள்ளார். தற்போது இந்தப் பெண்ணின் புகைப்படம், வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இவரது நம்பிக்கையை பாராட்டி வருகின்றனர்.
