Asianet News TamilAsianet News Tamil

லாஃடவுனில் "95 சதவீதத்தினர்" சிறார் ஆபாச படம் பார்ப்பதையே வேலையாக வைத்துள்ளனர்! அதிர வைக்கும் அதிர்ச்சி தகவல்

கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள சில செயலிகள் மூலம் சிறார் ஆபாச படங்கள் அனுப்புவதாகவும், அதன்மூலம் மற்றவர்களுக்கும் பகிரப்பட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனம் விளக்கம் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது 
 

95 percent people used to watch child porn videos in lockdown period
Author
Chennai, First Published Apr 27, 2020, 1:28 PM IST

லாஃடவுனில்.."95 சதவீதத்தினர்" சிறார் ஆபாச படம் பார்ப்பதையே வேலையாக வைத்துள்ளனர் ! அதிர  வைக்கும் அதிர்ச்சி தகவல்!

கொரோனா பரவுதலை தடுக்க இரண்டு கட்டங்களாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் மக்கள் அவர்கள் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்த ஒரு தருணத்தில் ஆபாச படங்களை பார்க்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து கூகுள் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. அதன்படி கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள சில செயலிகள் மூலம் சிறார் ஆபாச படங்கள் அனுப்புவதாகவும், அதன்மூலம் மற்றவர்களுக்கும் பகிரப்பட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனம் விளக்கம் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது 

95 percent people used to watch child porn videos in lockdown period

அதேபோன்று வாட்ஸப் நிறுவனத்திடமும், என்கிரிப்ட் வாட்ஸ்அப் குழுக்களிலும் ஆபாச படங்கள் பகிரப்பட்ட தாகவும் அதுகுறித்த குழுக்களில் இணைவதற்கு ஒருசில இணைப்பு அழைப்புகளை ட்விட்டரில் பகிரப்பட்டது தெரியவந்துள்ளது. அவற்றை எவ்வாறு அனுமதித்தது என்பது குறித்தும் வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்.

95 percent people used to watch child porn videos in lockdown period

ஏற்கனவே குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு ஏடிஜிபியான ரவி, ஆபாச படம் பார்ப்பது தவறு,குறிப்பாக ஆபாச படம் மொபைலில் வைத்திருந்தாலே சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு தருணத்தில், இது போன்று ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 95% அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios