கொரோனா - "லீவ் லெட்டர்" எழுதிய பள்ளி மாணவன்..! அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்..! 

இந்தியா முழுவதுமே கொரோனா வைரஸ் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் மாநில அரசு மும்முரமாக செயல்பட்டு மக்கள் மத்தியில் குறும்படம் மூலமாகவும் சுற்றறிக்கை மூலமாகவும் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தெளிவாக விளக்கி வருகிறது.

இந்த ஒரு நிலையில் சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கம் பகுதியில் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் செல்வராஜ் என்ற மாணவன் தன்னுடைய வகுப்பு ஆசிரியருக்கு லீவ் லெட்டர் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,

"கொரோனா வைரஸ்" வேகமாக பரவுகிறது என்பதால் தற்போது எனக்கு சளி காய்ச்சல் இருமல் இருக்கிறது. எனவே எனக்கு நீண்ட நாள் விடுமுறை வேண்டும் என குறிப்பிட்டு லெட்டர் எழுதி உள்ளார். மேலும் சளி காய்ச்சல் இருமல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை ஏற்கனவே அனுப்பப்பட்டு உள்ளதால், தான் வகுப்புக்கு வராமல் விடுப்பு எடுக்கிறேன் என்றும், என்னால் மற்ற மாணவர்கள் யாரும் பாதிக்கக் கூடாது. எனவே அவர்கள் நலன் கருதி நீண்ட விடுப்பு  வேண்டும் எனவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டு  உள்ளார்.


 
இந்த லெட்டர் மூலம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு சதாரண மாணவர்களுக்கும் உள்ளது என்பதை உறுதி செய்துள்ளது