அதிர்ச்சி: இந்தியாவில் 73 பேருக்கு கொரோனா..! கேரளாவுக்கு போகாதீங்க மக்களே! அமைச்சர் அட்வைஸ்...! 

உலகில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் மெல்ல மெல்ல பரவ தொடங்கியது. இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் ஏற்கனவே இரண்டு பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் புதிதாக 9 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுக்க ஒப்பிட்டு பார்க்கும் போது இதுவரை 73 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு அவரைகளை தனிமை படுத்தப்பட்டு தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஓமனில் இருந்து தமிழகம் வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த நபரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டு  உள்ளது.

இந்த நிலையில் கொரோனாவால் சற்று அதிகமாக பாதித்த மாநிலமான கேரளாவுக்கு தமிழக மக்கள் செல்ல வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தவிர கொரோனா பாதிப்பு உள்ள மற்ற மாநிலங்களுக்கும் மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மற்ற நாடுகளுக்குச் செல்வதை தவிர்த்தல் மிக நல்லது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தற்போது கேரளாவில் 17 பேரும், உத்திர பிரதேசத்தில் 10 பேருக்கும், மஹாராஷ்டிராவில் 11, டெல்லியில் 6 பேருக்கும், கர்நாடகாவில் 4 பேருக்கு என மொத்தம் 73 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.