RO வாட்டர் பியூரிஃபையர் வாங்க போறீங்களா? வாங்கும் முன் முதல்ல 'இத' பார்க்கவும்!
RO Water Purifier : நீங்கள் உங்களது வீட்டில் ஒரு புதிய RO வாட்டர் பியூரிஃபையர் வாங்க போகிறீர்கள் என்றால், அதை வாங்கும் முன் சில விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இன்றைய காலகட்டத்தில் வாட்டர் ஃபில்டர் ஒரு முக்கியமான வீட்டு தேவைகளில் ஒன்றாகி விட்டது. கடந்த காலங்களில் அது ஒரு ஆடம்பர பொருளாக தான் இருந்தது. காரணம் அதன் விலை அதிகம். ஆனால், தற்போது, அதன் விலை நியாயமாக இருப்பதால் பெரும்பாலான வீடுகளில் RO வாட்டர் பியூரிஃபையர் காண முடியும். அதுமட்டுமின்றி, அனைவரும் கலப்படமில்லாமல், சுத்தமான நீரை குடிக்க விரும்புவதால் RO வாட்டர் பியூரிஃபையர் வாங்கி பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில், நீங்கள் உங்களது வீட்டில் ஒரு புதிய RO வாட்டர் பியூரிஃபையர் வாங்க போகிறீர்கள் என்றால், அதை வாங்கும் முன் சில விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவை என்ன என்பதை குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: RO வேஸ்ட் வாட்டரில் குளிக்கலாமா? தெரிஞ்சிக்க படிங்க ஆனா 'ஷாக்' ஆகாம படிங்க..!!
RO வாட்டர் பியூரிஃபையர் வாங்கும் முன் இவற்றை நினைவில் வைத்துக்கொள் :
1. நீர் ஆதாரத்தின் டிடிஎஸ் அளவை அடிப்படையாகக் கொண்டு, ஆர்ஓ வாட்டர் பியூரிஃபையர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். TDS 50 முதல் 100 ppm வரை இருந்தால் பயன்படுத்துவதற்கு தகுதியானது. மேலும், 150 முதல் 200 ppm வரையிலான TDS நிலை நல்லதாக கருதப்படுகிறது. அதே சமயம், 200க்கும் மேல் இருந்தால் மோசமாகவும், 400 க்கு மேல் இருந்தால் மிகவும் மோசமானதாகவும் கருதப்படுகிறது.
2. நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய RO வாட்டர் பியூரிஃபையர் இன் வகை உங்கள் நீரின் மூலத்தை பொருத்தது. உதாரணமாக, நீங்கள் பயன்படுத்தும் தண்ணீர் ஆழ்துளை கிணறு, கடலூர் கடலோர பகுதி அல்லது முனிசிபல் டேங்க் போன்று குழாயில் இருந்து வரும் தண்ணீர் (uv) சுத்திகரிப்புக்கு பொதுவாக ஏற்றது. RO அதிக அசுத்தமான மூலங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே நேரத்தில், uv போன்ற தண்ணீரில் குறைந்த அசுத்தங்கள் இருப்பதால், அவற்றின் பயன்பாடு மிகவும் குறைவு.
இதையும் படிங்க: வீட்டில் ஆர்ஓ வாட்டரை பயன்படுத்துபவரா நீங்கள்...?? தயவு செய்து இதை படியுங்கள்...!!
3. அதுபோல நீங்கள் வாங்கும் RO வாட்டர் பியூரிஃபையர் உங்க குடும்ப தேவைகளுக்கு ஏற்ற வகையில் வாங்கி பயன்படுத்துங்கள்.
4. இந்தியாவில் மின்வெட்டு மிகவும் பொதுவானது. குறிப்பாக, கோடை மாதங்களில் அத்தகைய சூழ்நிலையில் அதிக நீர் கொள்ளளவு கொண்ட RO அமைப்பை வாங்குங்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் தண்ணீருக்காக கவலைப்பட வேண்டியதில்லை.
5. புதிய ஆரோ வாட்டர் பியூரிஃபையரை வாங்கும்போது உங்கள் பகுதியில் கிடைக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் உங்கள் பகுதியில் மாற்று வடிகட்டி கிட் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D