வீட்டில் ஆர்ஓ வாட்டரை பயன்படுத்துபவரா நீங்கள்...?? தயவு செய்து இதை படியுங்கள்...!!

நிலத்தடியில் இருந்து குழாய் மூலம் கிடைக்கும் தண்ணீரை  ஏராளமான மக்கள் வீட்டிலேயே ஆர் ஓ  முறையில் சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர் . 

if are drinking R O purifier water u should first read this news

ஆர்ஓ முறையில் சுத்திகரிக்கும்  குடிநீர் உடலுக்கு கேடு என்பதால்  ஆரோ தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கு  இன்னும் இரண்டு மாதத்திற்குள் தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது . நிலத்தடியில் இருந்து குழாய் மூலம் கிடைக்கும் தண்ணீரை  ஏராளமான மக்கள் வீட்டிலேயே ஆர் ஓ  முறையில் சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர் .  இந்நிலையில் ஆர் ஓ குடிநீர் சுத்திகரிப்பு தொடர்பான ஆய்வு முடிவுகள் குறித்து நிபுணர்கள் குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை ஒன்றை  தாக்கல் செய்தது அதில் ஒரு லிட்டர் குடி நீரில் கரைந்துள்ள திடப்பொருளின் மொத்த அளவு 500 மில்லி கிராமுக்கும் குறைவாக இருக்கும் வகையில் குடிநீரை சுத்திகரிக்கும் ஆர் ஓ எந்திரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது .

if are drinking R O purifier water u should first read this news

ஏனென்றால் ஆர் ஓ முறையால் பெறப்படும் குடிநீர் பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் ,   சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது என நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது எனவே இதைத் தடை செய்ய வேண்டும் என்றும் இந்த உத்தரவை தெளிவாக அமல்படுத்த வேண்டும்  என்றும் மத்திய பசுமை தீர்ப்பாயம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது  .  இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணையை செயல்படுத்த குறைந்தது 4 மாத கால அவகாசம் தேவைப்படுகிறது என்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது . குழாய் மூலம் பெறப்படும் நிலத்தடி நீரை சுத்திகரிப்பு என்ற பெயரில் எல்லாவிதமான தாதுக்களையும் நீக்கி விடுவதால் அந்தத் தண்ணீர் குடிக்க உகந்தது அல்ல என தெரிவிக்கப்பட்டு இருப்பதே இதற்கு காரணமாக உள்ள நிலையில்,

if are drinking R O purifier water u should first read this news  

வனத்துறை சார்பில் தாக்கல் செய்துள்ள பதில்  ஆவணத்தில் கூறும்போது,   சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதில் வனத்துறை உறுதியாக இருக்கிறது,  அறிவிப்பாணை வெளியிட்டு அதை செயல்படுத்த சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது . எனவே  இத்தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்தி கருத்துக்கள் ,  ஆலோசனைகளைக்  கேட்க இரண்டு மாத கால அவகாசம் போதுமானதாக இருக்காது , மேலும் இதற்கு சட்டம் மற்றும் நீதித்துறை இடமிருந்து ஒப்புதலை பெற வேண்டும் எனவே 4 மாத கால அவகாசம் இருந்தால் இந்த உத்தரவை செயல்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது . 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios